விழுப்புரம் மாவட்டம் அந்தோணியம்மாள் ( வயது23 ) இந்திய அணி சார்பில் பெண்கள் கபடி பிரிவில் தங்க பதக்கம் வென்றுள்ளார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரை யாதவா கல்லூரியில் எம்.ஏ. தமிழ் படித்து வருபவர் அந்தோணியம்மாள் ( வயது23 ). இவரின் தந்தை சவரியப்பன் ஒரு பால் வியாபாரி. இவருடைய மகள் கபடி விளையாட்டில் ஆர்வம் மிக்கவர். கல்லூரியில் சேர்ந்த பயிற்சியாளர்கள் ஜனார்த்தனன், தேவா ஆகியோரது வழிகாட்டுதலின் பேரில் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டார். அதன் மூலம் மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்றார். 


வியட்நாமில் நடந்த 5-வது ஏசியன் பீச் கபடி போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்க அந்தோணியம்மாள் பங்கேற்றார். சிறப்பாக விளையாடிய அவர் தங்க பதக்கம் வென்றார். நேற்று இரவு 9 மணிக்கு விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரை வந்தார். அங்கு அவருக்கு கல்லூரி மாணவிகள், சக வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்ற மாரியப்பனுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.தற்போது நானும் அவர் போல் தங்கம் வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. வருகிற உலக கோப்பை போட்டியில் பெண்கள் கபடி பிரிவில் தங்கம் வெல்வதே எனது லட்சியமாக கருதுகிறேன். அதற்கான பயிற்சிகளை செய்து வருகிறேன். நான் தினமும் 6 மணி நேரம் பயிற்சிகள் மேற்கொள்வேன். என்னை போன்ற மற்ற வீராங்கனைகளுக்கும் இதையே கூற விரும்புகிறேன். 


உலக கோப்பையில் தங்கம் வாங்க வேண்டும் என்ற லட்சித்திற்காக கூடுதல் நேரம் பயிற்சி செய்ய இருக்கிறேன். என்னை போன்ற விளையாட்டு வீராங்கனைகளுக்கு தமிழக அரசு, அரசு வேலை வழங்க வேண்டும். அப்போது தான் வீரர்களுக்கும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் உருவாகும் என அவர் கூறினார்.