ஆஸ்திரேலியானா அஸ்வின் தான்... பைனலில் இந்த வீரருக்கு ஆப்பு - என்ன காரணம்?
Indian Cricket Team: உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய அணி அதன் பிளேயிங் லெவனில் பெரிய மாற்றத்தை கொண்டு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
India National Cricket Team: ஐசிசி நடப்பு ஆடவர் உலகக் கோப்பை தொடரின் (ICC World Cup 2023) இறுதிப்போட்டி வரும் நவ. 19ஆம் தேதி குஜராத் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
யாருக்கு வெற்றி?
ஆஸ்திரேலியா அணி தொடக்கத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவிடம் வீழ்ந்து திணறியது. ஆனால், உடனே சுதாரித்து அடுத்தடுத்து 7 போட்டிகளிலும் வென்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது. மேலும், அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவையும் வீழ்த்தி 8ஆவது முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
இந்தியா அணி (Team India) இதுவரை நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டி (World Cup Final) வரை முன்னேறி உள்ளது. இந்திய அணி இதுவரை இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது, மூன்றாவது கோப்பைக்கு தீவிரமாக போராடி வருகிறது. நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி தற்போது இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது. லீக் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருப்பதால் இந்தியா தற்போது மிகவும் தன்னம்பிக்கையுடன் இருக்கும்.
மாறாத பிளேயிங் லெவன்
இந்திய அணி இந்த தொடரில் பலமுறை பிளேயிங் லெவனை மாற்றியிருந்தாலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் போட்டி முதல் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றமே இல்லை. ரோஹித் (Rohit Sharma) - கில் ஓப்பனிங்; விராட் கோலி - ஷ்ரேயாஸ் ஐயர் - கேஎல் ராகுல் ஆகியோர் மிடில் ஆர்டர்; சூர்யகுமார் - ஜடேஜா ஆகியோர் பின்வரிசை என பேட்டிங் ஆர்டர் அசைக்க முடியாத அளவில் உள்ளது. பந்துவீச்சில் ஷமி - சிராஜ் - பும்ரா என மூன்று வேகப்பந்துவீச்சாளர்களும், குல்தீப் - ஜடேஜா என 2 ஸ்பின்னர்கள் என்ற பார்முலாவில்தான் இந்தியா கடந்த ஆறு போட்டிகளாக விளையாடி வருகிறது.
லீக் சுற்றின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா உடன் விளையாடிய இந்திய அணியில் ரவிசந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) 8ஆவது வீரராக இடம்பெற்றார். ஆனால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் போட்டியில் அஸ்வினுக்கு பதில் ஷர்துல் தாக்கூர் 8ஆவது வீரராக இருந்தார். தொடர்ந்து, வங்கதேச போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்படவே இந்திய அணி ஷர்துலை கழட்டிவிட்டு ஷமியை கைக்கொண்டது. பேட்டிங்கில் சூர்யகுமார் இணைந்துகொண்டார்.
சொதப்பும் சூர்யகுமார்
இந்த மாற்றம் கடந்த போட்டிகளாக இந்தியாவுக்கு பயன்பட்டது என்றாலும் இறுதிப்போட்டியிலும் பயனளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஷமி தற்போது அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதன்மையாக இருக்கிறார், அவரை நீக்க வாய்ப்பே இல்லை என்பது தெரிந்த விஷயம். ஆனால், சூரியகுமாரின் இடம் தற்போது சற்று கேள்விக்குள்ளாகியுள்ளது. சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) இந்த ஆறு இன்னிங்ஸ்களில் 88 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மட்டுமே அவர் சிறப்பாக விளையாடினார்.
ஏன் அஸ்வின் வேண்டும்?
இந்த நிலையில், இறுதிப்போட்டியில் (IND vs AUS Final) சூர்யகுமாருக்கு பதில் அஸ்வினை கண்டிப்பாக உள்ளே கொண்டுவர வேண்டும் என்ற கருத்து தற்போது வலுபெற தொடங்கி உள்ளது. கேஎல் ராகுல் வரை அனைத்து பேட்டர்களும் பலமாக இருக்கும் இந்த வேளையில் சூர்யகுமாருக்கு பதில் அஸ்வினை கொண்டுவந்தால் 6ஆவது பந்துவீச்சு ஆப்ஷன் இந்தியாவுக்கு கிடைக்கும், அஸ்வின் பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் கைக்கொடுப்பார்.
எனவே, அஸ்வினை இந்திய அணி கண்டிப்பாக எடுத்துவர வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். மேலும், நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 6ஆவது பந்துவீச்சாளர் இல்லாதது சற்று பின்னடைவை ஏற்படுத்தியதால் இந்தியா அதனை கணக்கில் எடுக்க வேண்டும் என கருதுகின்றனர். இருப்பினும், இதுவரை மாற்றாத பிளேயிங் லெவனை இறுதிப்போட்டியில் மாற்றுவார்கள் என எதிர்பார்க்க முடியாது.
மேலும் படிக்க | 'நிர்வாணமாக கடற்கரையில் ஓடுவேன்... இந்தியா ஜெயித்தால்' - நடிகை பளீச்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ