இந்திய அணியை சொந்த மண்ணிலும் சரி, அயல்நாட்டிலும் சரி தோற்கடிப்பது அவ்வளவு எளிதல்ல. ஒட்டுமொத்த அணிக்கும் இந்தியாவை வீழ்த்துவது மிகப்பெரிய சவால். இதற்கு காரணம் இந்திய அணியில் உள்ள துடிப்பான வீரர்கள் தான். இந்திய அணியில் இடம் பெற ஒரு போட்டியில் மட்டும் நன்றாக ஆடினால் போகாது. அணியில் அவரது இடத்தை தொடர்ந்து தக்க வைத்து கொள்வதும் மிகப்பெரிய சவால் தான்.  இந்திய அணியில் இடம் பெற்ற பெரும்பாலான வீரர்கள் தங்கள் இடத்தை இழந்து விட்டனர்.  இந்நிலையில், திங்கட்கிழமை, ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ரஞ்சி டிராபி இறுதி லீக் ஆட்டத்தில் வங்காள அணி பீகாரை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பெற்றது. மேலும் இந்த போட்டிக்கு பிறகு முதல் தர கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக மனோஜ் திவாரி அறிவித்தார். 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | IPL 2024 Schedule: ஐபிஎல் முதல் போட்டியில் சிஎஸ்கேவுடன் மோதும் குஜராத்..! தோனி vs கில் ரெடி


இந்நிலையில், தோனி கேப்டனாக இருந்த போது தன்னை ஏன் அணியில் இருந்து நீக்குனீர்கள் என்று அவரது வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளார். மனோஜ் திவாரி 2008ல் இந்திய அணியில் அறிமுகமானார். ஏழு ஆண்டுகளில் 12 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகள் மற்றும் எட்டு வெவ்வேறு தொடர்களில் இந்தியாவிற்காக விளையாடி உள்ளார் மனோஜ் திவாரி. டிசம்பர் 2011ம் ஆண்டு தனது முதல் சர்வதேச சதத்தை சென்னையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அடித்து இருந்தார். இருப்பினும், அவர் அடுத்த வாய்ப்பிற்காக ஏழு மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.  மனோஜ் திவாரி ஓய்வை அறிவித்த பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 2011ம் ஆண்டு நான் அடித்த சதம் எனக்கு ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுத்தந்த போதிலும், எனக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.


என்னை ஏன் தொடர்ந்து 14 போட்டிகளில் விளையாட வைக்கவில்லை என்று அப்போதைய கேப்டன் தோனியிடம் இருந்து விளக்கம் கேட்க விரும்புவதாக திவாரி பேசியுள்ளார். மேலும், விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் சுரேஷ் ரெய்னா போன்ற சில முன்னணி வீரர்கள் ரன்கள் அடிக்க சிரமப்பட்ட போதிலும் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் தான் புறக்கணிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். "எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் அவரிடம் நிச்சயமாக இந்த கேள்வியைக் கேட்பேன். சதம் அடித்த பிறகு நான் ஏன் அணியில் இருந்து நீக்கப்பட்டேன்? குறிப்பாக யாரும் ரன் எடுக்காத ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் நான் இடம் பெறவில்லை. நான் இப்போது இழப்பதற்கு எதுவும் இல்லை," என்று அவர் கூறி உள்ளார்.


"நான் 65 முதல் தர போட்டிகளில் விளையாடி இருந்தேன், ​​எனது பேட்டிங் சராசரி 65 ஆக இருந்தது. ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த போது, பயிற்சி ஆட்டத்தில் நான் 130 ரன்கள் அடித்தேன், பிறகு இங்கிலாந்துக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் 93 ரன்கள் எடுத்தேன். ஆனால் எனக்கு பதிலாக யுவராஜ் சிங்கை தேர்வு செய்தார்கள். நன்றாக விளையாடியும் நான் புறக்கணிக்கப்பட்டேன்" என்று அவர் மேலும் கூறினார். 38 வயதான வங்காள வீரர் மனோஜ் திவாரி தற்போது முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.  தற்போது அந்த மாநிலத்தில் அமைச்சராகவும் உள்ளார்.  2004 முதல் விளையாடி வரும் திவாரி 147 முதல் தர போட்டிகளில் 10,000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.


மேலும் படிக்க | IPL 2024: சர்ஃபராஸ் கானின் சேவை... எந்த ஐபிஎல் அணிக்கு தேவை...?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ