சென்னையில் நடக்கவிருக்கும் IPL போட்டிகளை கேரளாவிற்கு மாற்ற திட்டமிடப் பட்டுள்ளதாக வந்த தகவல்களுக்கு IPL தலைவர் ராஜிவ் சுக்லா மறுப்பு தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் நடக்கும் IPL போட்டிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்றும், தடை செய்ய வேண்டும் தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனை மீறி போட்டிகளை நடத்தினால் கிரிக்கெட் மைதானத்தில் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தனர்.


இதனிடையே வரும் 10-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைப்பெறவிருக்கும் போட்டி கேரளாவின் திருவணந்தப்புரத்துக்கு மாற்றப்படும் என தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் இன்று IPL தலைவர் ராஜிவ் சுக்லா இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் போட்டிகள் திட்டமிட்டப்படி சென்னியிலேயே நடைப்பெறும் எனவும் தெரிவித்துள்ளார். .



இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன என்பது குறிப்பிடத்தக்ககது.