மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை சிதம்பரம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெறவிருக்கும் ஒருநாள் தொடரில் காயமடைந்த ஷிகர் தவானுக்கு மாற்றாக தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.


சூரத்தில், மகாராஷ்டிராவுக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி டிராபி  ஆட்டத்தின் போது தவானுக்கு இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. காயம் காரணமாக ஓய்வில் இருந்த அவரது நிலை குறித்து மறுபரிசீலனை செய்ய BCCI மருத்துவ குழு அவரை மதிப்பீடு செய்தது. சோதனையின் போது தவானின் காயத்தின் தையல்கள் வெளிப்படவும், காயம் முழுமையாக குணமடையவும் இன்னும் சிறிது காலம் தேவைப்படும் என BCCI மருத்துவக் குழு பரிந்துரைத்துள்ளது.


இதனையடுத்து தவானின் இடைவெளியைனை பூர்த்தி செய்யும் விதமாக, அகில இந்திய மூத்த தேர்வுக் குழு மேற்கிந்திய தீவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தவானுக்கு பதிலாக மயங்க் அகர்வால் பெயரிட்டுள்ளது. முன்னதாக டி20 தொடரில் காயம் காரணமாக விலகியிருந்த ஷிகர் தவானுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இதுகுறித்து தெரிவிக்கையில்., தனது ஓய்வில் இருந்து மீண்டு வர தவானுக்கு இன்னும் சிறிது நேரம் தேவைப்படும். எனவே, மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் போட்டிகளுக்கு அவருக்கு மாற்றாக மயங்க் அகர்வால் தேசிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக BCCI வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது., "BCCI மருத்துவ குழு, தவானின் தையல்கள் அணைக்கப்பட்டு, அவரது காயம் படிப்படியாக குணமடைந்து வருவதால், முழு போட்டித் திறனை மீண்டும் பெற அவருக்கு இன்னும் சிறிது நேரம் தேவைப்படும்" என்று குறிப்பிட்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான வரவிருக்கும் Paytm ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் காயமடைந்த ஷிகர் தவானுக்கு மாற்றாக அகில இந்திய மூத்த தேர்வுக் குழு மாயங்க் அகர்வாலை நியமித்துள்ளது என்று நாட்டின் கிரிக்கெட் வாரியம் மேலும் தெரிவித்துள்ளது.


குறிப்பிடத்தக்க வகையில், அகர்வால் இந்தியாவுக்காக ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். என்றபோதிலும் அவர் இன்னும் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


முழு இந்திய அணியும் பின்வருமாறு:


விராட் கோலி, ரோஹித் சர்மா (துணை கேப்டன்), மாயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பந்த், சிவம் துபே, கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் முகமது ஷமி, புவனேஷ்வர் குமார்.