Punjab Kings கேப்டனானார் மயங்க் அகர்வால்! பஞ்சாப் அணியை வழி நடத்தும் போட்டியில் வெற்றி!
ஐபிஎல் 2022 போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் தேர்வு செய்யப்பட்டார்.
ஐபிஎல் 2022 போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் தேர்வு செய்யப்பட்டார்.
பஞ்சாப் கிங்ஸ் (PBKS), தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வாலை தனது ஐபிஎல் அணியின் கேப்டனாக நியமித்தது. திங்கட்கிழமை (பிப்ரவரி 28) இந்தியாவில் நடைபெறும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2022 போட்டிகளில் பஞ்சாப் அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்பது தொடர்பான பல ஊகங்களுக்குப் பிறகு, மயங்க் கேப்டன் பதவியை வென்றார்.
மயங்க், இப்போது தனது நல்ல நண்பரும் முன்னாள் பஞ்சாப் தொடக்க வீரருமான கே.எல்.ராகுலைத் தொடர்ந்து கேப்டனாக களம் இராங்குகிறார். ஐபிஎல் 2018 முதல் பிபிகேஎஸ் அணியில் இருந்து வரும் மயங்க் அகர்வால், ஐபிஎல்லின் கடந்த இரண்டு பதிப்புகளில் அற்புதமான ரன்களை எடுத்து, மொத்தம் 424 ரன்கள் குவித்தார்.
மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸூக்கு எதிராக மற்ற ஐபிஎல் அணிகள்..
ஐபிஎல் 2020 இல் 156.45 மற்றும் கடந்த ஆண்டு சீசனில் 140.44 ஸ்ட்ரைக் ரேட்டில் 4 அரை சதங்களுடன் 441 ரன்கள் எடுத்துள்ளார். மெகா ஏலத்திற்கு முன்னதாக (INR 140 மில்லியனுக்கு) பஞ்சாப் அணியின் உரிமையாளரால் தக்கவைக்கப்பட்ட ஒரே வீரர் மயங்க் அகர்வால் என்பதும் குறிப்பிடத்தக்கது.
"நான் 2018 முதல் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருக்கிறேன், இந்த அருமையான அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அணியை வழிநடத்தும் வாய்ப்பைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் பொறுப்பை நான் மிகுந்த நேர்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அதே நேரத்தில், இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருக்கும் திறமையால் எனது பணி எளிதாகும் என நம்புகிறேன்” என்று மயங்க் அகர்வால் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய அணிகளில் சில அனுபவமிக்க வீரர்கள் உள்ளனர், அவர்களுடன் பல திறமையான இளைஞர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க ஆர்வமாக உள்ளனர். பட்டத்தை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் களத்தில் இறங்கியுள்ளோம், மேலும் ஒரு அணியாக மீண்டும் எங்கள் முதல் ஐபிஎல் கோப்பையை உயர்த்தும் இந்த இலக்கை நோக்கி செயல்படுவோம். அணியை வழிநடத்தும் புதிய பொறுப்பை என்னிடம் ஒப்படைத்ததற்காக அணி நிர்வாகத்திற்கு நன்றி. புதிய சீசன் மற்றும் அது கொண்டு வரும் புதிய சவால்களை எதிர்நோக்குகிறேன்,” என்று மயங்க் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | இலங்கை அணியை டி-20 தொடரில் மண்ணைக் கவ்வ வைத்த இந்திய அணி
பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கூறும்போது, “2018ஆம் ஆண்டிலிருந்து மயங்க் அணியின் ஒருங்கிணைந்த பகுதியாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தலைமைக் குழுவிலும் உள்ளார். சமீபத்தில் முடிவடைந்த ஏலத்தில் நாங்கள் தேர்ந்தெடுத்த புதிய அணியில் அற்புதமான இளம் திறமைகள் மற்றும் சிறந்த அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். மயங்க் தலைமையில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக எதிர்காலத்திற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்க விரும்புகிறோம். அவர் கடின உழைப்பாளி, ஆர்வமுள்ளவர், ஒரு தலைவருக்குத் தேவையான அனைத்து பண்புகளையும் கொண்ட அணி வீரர். அவருடன் கேப்டனாக பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன், மேலும் அவர் இந்த அணியை வெற்றிகரமான பிரச்சாரத்திற்கு அழைத்துச் செல்வார் என்று நம்புகிறேன்.
ஐபிஎல் 2022க்கான பிபிகேஎஸ் அணி
மயங்க் அகர்வால் (கேப்டன்), அர்ஷ்தீப் சிங், ஷிகர் தவான், ககிசோ ரபாடா, ஜானி பேர்ஸ்டோவ், ராகுல் சாஹர், ஷாருக் கான், ஹர்ப்ரீத் ப்ரார், பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா, இஷான் போரல், லியாம் லிவிங்ஸ்டோன், ஒடியன் ஸ்மித், சந்தீப் சர்மா, ராஜ்வான் பாவா, ரிஷி பாவா, , பிரேரக் மன்கட், வைபவ் அரோரா, ரிட்டிக் சாட்டர்ஜி, பல்தேஜ் தண்டா, அன்ஷ் படேல், நாதன் எல்லிஸ், அதர்வா டைடே, பானுகா ராஜபக்சே, பென்னி ஹோவெல்
மேலும் படிக்க | இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR