MI vs CSK Match IPL 2024: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. தற்போது லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் சூழலில், அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் 5 போட்டிகளை விளையாடிவிட்டன. ராஜஸ்தான், கொல்கத்தா, லக்னோ, சென்னை உள்ளிட்ட அணிகள் தற்போது முதல் நான்கு இடங்களில் உள்ளனர். இருப்பினும் ஐபிஎல் நீண்ட தொடர் என்பதால் நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபிஎல் தொடர் என்றாலே சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். இதுவரை 16 தொடர்கள் நிறைவடைந்துள்ளன. அதில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தலா 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. கொல்கத்தா அணி 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெக்கான் சார்ஜர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா 1 முறை கோப்பையை வென்றுள்ளன. 


வான்கடேவில் El Clasico


இதில் இருந்தே ஏன் சென்னை, மும்பை அணிகள் அதிக கவனத்தை பெறுகின்றன என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம். அந்த வகையில், சென்னை - மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி என்றால் எதிர்பார்ப்புகள் வானளவிற்கு இருக்கும் அல்லவா... அந்த நாள் நெருங்கிவிட்டது. வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் வான்கடேவில் போட்டியிடுகின்றன. எனவே இப்போது இருந்தே இந்த போட்டியின் மீது அதிக கவனம் குவிந்துள்ளது.


மேலும் படிக்க | கிரிக்கெட்டில் ஓய்வு பெறப்போகும் நேரம் இதுதான் - ரோகித் சர்மா அறிவிப்பு


மும்பை இந்தியன்ஸ் அணி (Mumbai Indians) நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 93 பந்துகளில் 199 ரன்களை குவித்து மிரட்டியது. இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அதிரடியாக அரைசதம் அடித்து மிரட்டியிருக்கிறார்கள். முதல் மூன்று போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி படுதோல்வி அடைந்தாலும், டெல்லி மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு எதிரான போட்டிகளை அசாத்தியமாக வென்றிருப்பது பிற அணிகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது. 


இந்த 5 வீரர்கள் போதும்...


அந்த வகையில் சென்னை அணி (Chennai Super Kings) மும்பை அணியை எப்படி வான்கடேவில் எதிர்கொள்ளும் என்ற கேள்வி அனைவருக்கும் உள்ளது. டெல்லி, ஆர்சிபி போல் சிஎஸ்கே அணிக்கு மோசமான பந்துவீச்சு லைன்அப் இல்லாவிட்டாலும் மும்பை அணி வான்கடேவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்திருப்பதால் சிஎஸ்கேவுக்கு இந்த போட்டி கடினமான ஒன்றாகவே இருக்கும். குறிப்பாக, சிஎஸ்கே இந்த தொடரில் சேப்பாக்கத்தில் மட்டுமே மூன்று வெற்றிகளையும் பெற்றுள்ளது, சென்னைக்கு வெளியே விளையாடிய 2 போட்டிகளிலும் சிஎஸ்கே தோல்வியடைந்துள்ளது. 


மும்பை அணியை வீழ்த்த சிஎஸ்கே அணிக்கு இந்த 5 வீரர்கள் பக்கபலமாக இருப்பார்கள் எனலாம். பிளேயிங் லெவனில் உள்ள ருதுராஜ் கெய்க்வாட், ரஹானே, சிவம் தூபே, ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே என ஐந்து பேரும் மும்பை, மஹாராஷ்டிர கிரிக்கெட் வீரர்கள் ஆவர். இவர்கள் கடந்த சில நாள்களாகவே ரஞ்சி கோப்பை உள்ளிட்ட பல போட்டிகளில் மும்பையில் விளையாடி உள்ளனர். 


இவர்களுக்கு சூழலும் தெரியும், ஆடுகளமும் தெரியும் என்பதால் சிஎஸ்கே அணிக்கு வெற்றி வாய்ப்பும் நன்றாகவே உள்ளது. பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் சிஎஸ்கேவுக்கு நல்ல பலம் உள்ளது. மேலும், டாஸ் தோற்று முதலில் சிஎஸ்கே பேட்டிங் செய்தாலும் கூட அந்த அணியால் வெற்றியடைய முடியும் என்பதை இதன் மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம். 


மேலும் படிக்க | சென்னை அணிக்கு புதிய சிக்கல்! அணிக்கு திரும்பும் டெவோன் கான்வே!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ