புதுடெல்லி: புது ஷீவை வாங்கவே ஒன்றுக்கு நூறு முறை யோசிக்கும்போது, ஒரு ஜோடி பழைய ஷீவை $615,000 அமெரிக்க டாலருக்கு வாங்கும் செல்வந்தர்களும் உலகில் இருக்கிறார்கள்!!!  கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஜோர்டானின் ஒரு ஜோடி காலணிகள் $615,000 அமெரிக்க டாலருக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது ஆகஸ்ட் மாதக் கதை என்றால், சில மாதங்களுக்கு முன்பு Michael Jordanனின் மற்றுமொரு ஜோடி ஷீவை Christie’s auction house விற்று சாதனை செய்தது. அந்த சாதனையை விஞ்சிய மாபெரும் விற்பனைச் சாதனையாக இன்னொரு ஜோடி ஷீ விற்றுள்ளது.  


1985 ஆம் ஆண்டு இத்தாலியில் நடந்த கண்காட்சி போட்டியின் போது NBA சூப்பர் ஸ்டார் அணிந்திருந்த  Air Jordan 1 Highs ஷீவானது, அவரின் வெற்றிக்கு மிகவும்  உதவியது. அந்த ஷீவின் உதவியால் அவர் அடித்த பந்தானது, ஒரு கண்ணாடியையே உடைத்துவிட்ட்து.  எனவே அந்த ஷீ மிகவும் பிரபலமானது.


"இது ஷூவில் மாட்டியிருக்கும் அன்று உடைந்த கண்ணாடியின் ஒரு துண்டு" என்று கிறிஸ்டியின் handbag and sneaker விற்பனைப் பிரிவின் தலைவர்  கெய்ட்லின் டொனோவன் (Caitlin Donovan)கூறினார். Christie’s auction house, விளையாட்டு மைதானம் சம்பந்தப்பட்டப் பொருட்களை ஏலம் விடும் ஒரு பிரபல நிறுவனம் ஆகும்.


சிகாகோ புல்ஸ் அணியின்  அடையாள வண்ணமான சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தில் இருக்கும் ஜோர்டனின் ஷீவின் அளவு எண் 13.5. முன்னதாக, மைக்கேல் ஜோர்டானின் ஏர் ஜோர்டான் 1 மே மாதத்தில் 5,60,000 அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தில் விற்பனையாகி சாதனி  படைத்தது. அதே நேரத்தில் புதிய ஏலம் 6,50,000 அமெரிக்க டாலர்களை பெற்றுத் தந்துள்ளது.


Also Read | IPL 2020: CSK கேப்டன் எம் எஸ் தோனியின் COVID-19 Test முடிவு என்ன?


ஜோர்டான் மற்றும் சிகாகோ புல்ஸ்ஸின் சகாப்தத்தை விவரிக்கும் ‘The Last Dance’ என்ற ஆவணப்படம் வெளியானதிலிருந்து ஓய்வுபெற்ற கூடைப்பந்து மெகாஸ்டர் Michael Jordan மிகவும் பிரபலமானார்.  அவருடைய பொருட்களுக்கான சந்தை மதிப்பை ராக்கெட் வேகத்தில் ஏறிவிட்டது.  


பாரம்பரியமான பொருட்களை சேகரிக்கும் செல்வ சீமான்கள் மத்தியில் ஸ்னீக்கருக்கான மதிப்பு இன்னும் தொடர்வதையும் இந்த சாதனை விற்பனை உறுதிப்படுத்துகிறது.


கூந்தல் உள்ள சீமாட்டி தலையலங்காரம் எப்படி வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம் என்று ஒரு தமிழ் முதுமொழி உண்டல்லவா?  கையில் காசு உள்ளவர்களுக்கு கை அரித்தால், காலில் போடும் ஷீவை அது 35 ஆண்டு பழைய, கிழிந்த நிலையில் இருந்தாலும் வாங்குவார்கள் என்பதை பழைய பழமொழி உண்மையாக்கிவிட்டது.