அதிசயம் நடந்தால் தான் உண்டு, இல்லையென்றால் மும்பை வெளியேறுவது உறுதி
IPL 2021, Mumbai vs Hyderabad: மும்பை இந்தியன்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக 170+ ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
IPL 2021, Mumbai vs Hyderabad: ஐபிஎல் பட்டத்தை தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வெல்ல வேண்டும் என்ற மும்பை இந்தியன்ஸின் (எம்ஐ) கனவு கிட்டத்தட்ட தகர்ந்துவிட்டது. ஐந்து முறை சாம்பியனான மும்பை அணி, ஐபிஎல் 2021 தொடரில் இருந்து வெளியேறும் விளிம்பில் உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) வியாழக்கிழமை நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதால், நடப்பு சாம்பியன் அணியின் நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை (SRH) வென்றாலும், அவர்கள் 14 புள்ளிகளுடன் கொல்கத்தாவுக்கு சமமாக இருப்பார்கள். ஆனால், நிகர ரன் விகிதத்தில் கொல்கத்தாவை முந்திச்செல்வது மிகவும் கடினமாக இருக்கும். எப்படி என்றால் மும்பை இந்தியன்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக 170+ ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். ஒருவேளை இன்றைய போட்டியில் டாஸில் வெல்லவில்லை எனில், ரோஹித்தின் அணியை பத்துவீச அழைக்கப்பட்டால், பிளேஆப்பில் கொல்கத்தாவின் இடம் உறுதி செய்யப்படும்.
மும்பை அணி இன்று அதிசயத்தை அரங்கேற்ற வேண்டும்:
கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். அது ஒரு நிச்சயமற்ற விளையாட்டாக இருக்கிறது. அதேநேரத்தில் கிரிக்கெட் விளையாட்டில் பல முறை அற்புதங்களும் நிகழ்த்துள்ளன. உதாரணமாக, 2001-ல் கொல்கத்தாவில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியை யார் மறக்க முடியும். ஃபாலோ-ஆன் செய்து விளையாடிய போதிலும் இந்திய அணி ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது அனைவருக்கும் நினைவில் இருக்கும்.
இன்றிய ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் ஒரு பெரிய அதிசயத்தை செய்ய வேண்டும். முதலில், ரோகித் சர்மா எப்படியாது டாஸ் வெல்ல வேண்டும். அதனால் இரண்டாவது பேட்டிங் வராது. டாஸ் வென்றாலும் மும்பை 200+ ரன்கள் எடுக்க வேண்டும். இதைச் செய்ய, மும்பை ஜாம்பவான்களான ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் போன்ற பேட்ஸ்மேன்கள் மிகவும் புயலாக ரன்கள் எடுக்க வேண்டும்.
டி 20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் ஒரு அணியின் அதிக ரன்கள் பற்றி பேசுகையில், இந்த சாதனை ஆப்கானிஸ்தான் பெயரில் உள்ளது. 2019 இல், ஆப்கானிஸ்தான் அணி அயர்லாந்துக்கு எதிராக 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்கு 278 ரன்கள் எடுத்தது. இத்தகைய சூழ்நிலையில், மும்பை பேட்ஸ்மேன்கள் ஆப்கான் அணியை போல செயல்பட வேண்டும்.
ஒரே போட்டியில் அதிக ரன்கள் எடுத்த அணி:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த ஆணி என்ற சாதனை படைத்துள்ளது. 2013 இல், ஆர்சிபி அணி புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்தது. அந்த போட்டியில் கிறிஸ் கெய்ல் என்ற புயல் இருந்தது. அவர் ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் எடுத்தார்.
மும்பை இந்தியன்ஸ் பற்றி பேசுகையில், ஐபிஎல்லில் அதன் சிறந்த ஸ்கோர் 6 விக்கெட்டுக்கு 223 ரன்கள். இந்த ஸ்கோர் மும்பை 2017 ல் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) க்கு எதிரான இலக்கை அடையும் போது எடுத்தது. ஐபிஎல்லில் முதலில் பேட்டிங் செய்த போது அடித்த மும்பையின் சிறந்த ஸ்கோர் 218/7 ஆகும். இது 2010 ல் டெல்லி டேர்டெவில்ஸ் (DD) க்கு எதிராக அடித்தனர்.
ஐபிஎல்லில் குறைந்தபட்ச ரன்கள் பதிவு பெங்களூருவின் பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டில், கொல்கத்தாவுக்கு எதிராக கோலியின் படை 49 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டது மற்றும் 82 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது.
மும்பைக்கு மிகப்பெரிய வெற்றி:
மும்பைக்கு எதிரான ஐபிஎல்லில் குறைந்தபட்ச ஸ்கோர் பற்றி பேசுகையில், இந்த பதிவு டெல்லி கேபிடல்ஸ் பெயரில் உள்ளது. 2017 ஐபிஎல்லில், மும்பைக்கு எதிராக 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த டெல்லி அணி 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மும்பை அந்த போட்டியில் 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, இது ரன்கள் அடிப்படையில் மிகப்பெரிய ஐபிஎல் வெற்றி.
இன்றும் அதேபோன்ற வரலாற்றுச் செயல்பாட்டை மீண்டும் மும்பையின் பந்துவீச்சாளர்கள் செய்ய வேண்டும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR