ஐபிஎல் போட்டியை வெறுக்கும் வேகப் பந்துவீச்சாளர்
ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு உலகம் முழவதும் உள்ள வீரர்கள் ஆர்வம் காட்டினாலும், இந்த வீரர் மட்டும் கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் விளையாடுவதை வெறுக்கிறார்.
15வது ஐபிஎல் போட்டி மிகப் பிரம்மாண்டமாக மும்பை வான்கடேவில் தொடங்குகிறது. கடந்த ஆண்டுகளில் 8 அணிகள் பங்கேற்று வந்த நிலையில், இந்த ஆண்டு 10 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. இதில் உலகம் முழுவதும் உள்ள திறமை வாய்ந்த வீரர்கள் பல்வேறு அணிகளில் பங்கேற்று விளையாட உள்ளன. ஆனால், ஒரு ஒரு வீரர் மட்டும் கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் போட்டியில் விளையாட விருப்பம் இல்லாமல் உள்ளார்.
மேலும் படிக்க | ஜடேஜாவை புகழந்து தோனியை புறக்கணித்த ரெய்னா - காரணம் என்ன?
ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளரான அவர், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. முன்னணி அணிகளும் அவரை ஏலம் எடுக்கலாம் என முடிவு செய்து வைத்திருந்தன. ஆனால், அவர் கடைசி நேரத்தில் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கவில்லை என அறிவித்தார். அவர் வேறுயாருமல்ல .. மிட்செல் ஸ்டார்க்.
20 ஓவர் கிரிக்கெட்டில் உலகின் சிறந்த பந்துவீச்சாளராக உள்ள அவர், ஐபிஎல் போட்டியில் விளையாட கடந்த சில ஆண்டுகளாக மறுத்து வருகிறார். 2014 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் தன்னுடைய பெயரை பதிவு செய்த மிட்செல் ஸ்டார்க்கை ஆர்சிபி பெங்களுரூ அணி ஏலம் எடுத்தது. அந்த அணியில் விளையாடிய அவர் காயம் காரணமாக 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது. 2017 ஆம் ஆண்டும் விளையாடவில்லை. 2018 ஆம் ஆண்டு ஐபில் போட்டிக்கு திரும்பிய அவரை கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது.
மீண்டும் காயம் அடைந்ததால் 2019 ஆம் ஆண்டு மீண்டும் காயத்தால் பாதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக தன்னுடைய பெயரை ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்வதை தவிர்த்து வருகிறார். ஐபிஎல் என்பது நீண்ட நாட்கள் விளையாட வேண்டும் என்பதால் காயம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் போட்டியை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்.
மேலும் படிக்க | இதுவரை இந்திய அணி வீரர்களுக்குள் நடைபெற்ற முக்கிய சண்டைகள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR