இதுவரை இந்திய அணி வீரர்களுக்குள் நடைபெற்ற முக்கிய சண்டைகள்!

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் போட்டியின் நடுவே தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டனர்.  

Written by - RK Spark | Last Updated : Mar 25, 2022, 08:38 AM IST
  • இந்திய வீரர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டுள்ளனர்.
  • கம்பீரும் விராட் கோலியும் மைதானத்தில் மோதி கொண்டனர்.
  • அம்பதி ராயுடு தோனியை கோபப்படுத்தி உள்ளார்.
இதுவரை இந்திய அணி வீரர்களுக்குள் நடைபெற்ற முக்கிய சண்டைகள்! title=

உலகில் அதிக ரசிகர்களை கொண்ட ஒரு விளையாட்டு கிரிக்கெட்.  11 வீரர்களும் ஒன்றாக, ஒரு அணியாக விளையாடி எதிரணியை வீழ்த்துவதை அனைவரும் ரசிப்பர்.  இருப்பினும், சில நேரங்களில் சொந்த அணிக்குள்ளேயே சிறிது சண்டைகள் நடைபெறும்.  இந்திய கிரிக்கெட் வீரர்கள் போட்டிகளின் போது தங்கள் சக வீரர்களுடன் சண்டையிட்ட ஐந்து தருணங்களை பாப்போம்.

மேலும் படிக்க | எம்எஸ் தோனியின் கேப்டன்சி சாதனைகள்!

விராட் கோலி - கவுதம் கம்பீர்

இந்த சண்டை இந்தியன் பிரீமியர் லீக் 2013 சீசனில் நடந்தது. ஆர்சிபி மற்றும் கேகேஆர் இடையேயான போட்டியின் நடுவில் விராட் கோலி மற்றும் கெளதம் கம்பீர் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.  விராட் கோலி அவுட் ஆனதும், கம்பீரும் சக அணியினருடன் கூடி கொண்டாடினர்.  அப்போது, இருவருக்கும் சண்டை ஏற்பட்டது.  இருவருக்கும் இடையே வெளிப்படையான வார்த்தைப் பரிமாற்றத்திற்குப் பிறகு கம்பீர் கோபத்துடன் விராட்டை அணுகத் தொடங்கினார். பிறகு போட்டி முடிந்தவுடன் இருவரும் சமாதானத்துடன் சென்றனர்.

virat

சுரேஷ் ரெய்னா - ரவீந்திர ஜடேஜா

2013ல் இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முத்தரப்புத் தொடரில், எம்.எஸ். தோனி விளையாட முடியாத சூழலில், விராட் கோலியை கேப்டனாக செயல்பட்டார். முந்தைய இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்த இளம் இந்திய அணிக்கு நிறைய அழுத்தம் இருந்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரரின் கேட்சை ரெய்னா தவற விட, கோபமடைந்த ஜடேஜா ரெய்னாவை திட்டினார்.  இரு வீரர்களிடையே வெளிப்படையான மோதல் இருந்தது. ஜடேஜா ரெய்னாவிடம், "இதனால்தான் நீங்கள் கேப்டன் இல்லை" என்று சொன்னதாக கூறப்படுகிறது.  பிறகு இரு வீரர்களும் பேசி பிரச்சனையை தீர்த்தனர்.

jadeja

அம்பதி ராயுடு - ஹர்பஜன் சிங்

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2016 போட்டியின் போது இந்த நிகழ்வு நிகழ்ந்தது. இதில் அனுபவம் வாய்ந்த ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர் சண்டையிட்டு கொண்டனர். புனே அணிக்காக பேட்டிங் செய்த சவுரப் திவாரி, பவுண்டரி நோக்கி பந்தை அடிக்க, ராயுடு அதனை தடுக்க தவறவிட்டார். இதனால் இருவரும் நேரெதிராக சண்டையிட்டு கொண்டனர்.

harbajan

ஆஷிஷ் நெஹ்ரா - எம்எஸ் தோனி

இந்த சம்பவம் 2005-ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான 4வது ஒருநாள் போட்டியில் நடந்தது. 10 ரன்களில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ஷாகித் அப்ரிடியின், கேட்சை தோனி தவறவிட்டார்.  இதனால் கடுப்பான நெஹ்ரா தோனியை பார்த்து சில வார்த்தைகளை கூறினார்.  இதனால் மைதானத்தில் சில சலசலப்பு ஏற்பட்டது.  

 

மேலும் படிக்க | ஐபிஎல்-ல் கடைசி ஓவரில் அதிக சிக்ஸ்சர்கள் அடித்தது இவரா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News