அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக, இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களுள் ஒருவர் மொகமது கைஃப். கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்கு இவர் அறிமுகமானார். இதுவரை இந்திய அணிக்காக 13 டெஸ்ட், 125 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கைஃப் 3,377 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி, ஃபீல்டிங்கில் தடுமாறிக்கொண்டிருந்த காலத்தில், பொக்கிஷம்போல கிடைத்தவர் முகமது கைஃப். இதற்கு முன், இப்படி ஒரு ஃபீல்டரை இந்திய அணி கண்டதில்லை. 


அவரது சுறுசுறுப்பும் வேகமும் மற்ற வீரர்களிடமிருந்து தனித்துக் காட்டியது. தோனியின் மின்னல்  வேகமாக ஸ்டெம்பிங், ரெய்னாவின் அபாரமான ஃபீல்டிங், ஜடேஜாவின் த்ரோ இவை அனைத்தும் ஒருங்கே காணப்பட்ட வீரர் கைஃப். இக்கட்டான கட்டத்தில் கடினமான கேட்சுகளைப் பிடித்து, அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தவர்.


கடந்த 12 ஆண்டுகளாக இந்திய அணியில் விளையாடாத கைஃப் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு நாட்வெஸ்ட் தொடரில் இந்திய அணியை தோல்வியின் விளிம்பில் இருந்து வெற்றி பெற செய்த கைஃப் அனைத்து வகையான போட்டியிலிருந்தும் தற்போது ஓய்வு முடிவை வெளியிட்டுள்ளார்.