20 ஓவர் உலக கோப்பை 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி வங்கதேச அணியை வீழ்த்தியதன் மூலம் அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. தனது கடைசி போட்டியில் ஜிம்பாப்வே அணியை இந்திய அணி எதிர்கொள்ள இருக்கிறது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ஜிம்பாப்வே அணி, ஏற்கனவே பாகிஸ்தான் அணியை வீழ்த்தியிருப்பதால், இந்திய அணி அந்த அணியை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது. கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று, கம்பீரமாக அரையிறுதிக்கு நுழைய வேண்டும் என்பதே அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் விருப்பமாக இருக்கிறது. 


முகமது ஷமி ஓபன் டாக்


வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி சிறப்பாக பந்துவீசினார். இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் அவர் தன்னுடைய கடினமான காலங்களை நினைவு கூர்ந்துள்ளார். கடந்த 20 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறிய பிறகு, அவருக்கு இந்திய 20 ஓவர் அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவே இல்லை.


மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள்!


அவருக்கு பதிலாக ஜஸ்பிரித் பும்ரா, தீபக் சாஹர், ஆவேஷ்கான் ஆகியோரையே பிசிசிஐ தேர்வு செய்து கொண்டிருந்தது. ஆனால், பும்ரா, சாஹரின் காயம் மற்றும் ஆவேஷ் கானின் மோசமான பார்ம் ஆகியவை முகமது ஷமிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியது. நேரடியாக இந்திய 20 ஓவர் அணியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இடம்பிடித்த அவர், சிறப்பாக பந்துவீசிக் கொண்டிருக்கிறார்.இப்போது தான் செய்த முயற்சி குறித்து ஓபனாக பேசியுள்ளார்.


பயிற்சியை தவறவிடவில்லை


இந்திய அணிக்கு திரும்பியது குறித்து பேசிய முகமதுஷமி, 'அணிக்கு நீங்கள் தேவைப்படும்போது, ​​​​நீங்கள் அழைக்கப்படுவீர்கள். அதனால், நான் ஒருபோதும் பயிற்சியைத் தவறவிட்டதில்லை. நான் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டேன். கடந்த 20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு நேரடியாக இந்திய அணியின் 20 ஓவர் அணியில் இடம்பிடித்துள்ளேன். இது மகிழ்ச்சியாக இருக்கிறது. என் திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எந்த சூழ்நிலையிலும் பந்துவீசுவதற்கு நான் தயாராகவே இருக்கிறேன். கடினமான காலங்களில் நீங்கள் அமைதியாக இருப்பது அவசியம்’ எனத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து சுற்றுப் பயணத்திலிருந்து அணியில் இருந்து வெளியேறிய ஷமி, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அவர், அந்த தொடர்களில் விளையாட முடியாமல் போனது.


மேலும் படிக்க | கோலியின் ஹோட்டல் அறைக்குள் நுழைந்த நபர்! கடுப்பில் விராட் செய்த காரியம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ