ஐபிஎல் முடிந்துவிட்டதால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு இந்திய வீரர்கள் திரும்பிவிட்டனர். தென்னாப்பிரிக்கா தொடருக்கான பயிற்சியை தொடங்கியிருக்கும் வீரர்கள், இந்த தொடரை முழுமூச்சோடு வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் வெற்றி பெற்று சர்வதேச அளவிலும் இந்திய அணியின் ஆதிக்கத்தை நிலை நாட்ட வேண்டும் என இளம் படை தயாராக இருக்கிறது. ஏனென்ன்றால், இந்த தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | IND vs SA: கே.எல்.ராகுல் - ஹர்திக் பாண்டியா இடையே பூசல் - காரணம் இதுதான்


ரோகித் சர்மா, விராட்கோலி உள்ளிட்டோர் தென்னாப்பிரிக்க தொடரில் விளையாடவில்லை. கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டு அவரது தலைமையிலான இளம் படை களமிறங்க இருக்கிறது. விரைவில் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க இருப்பதால், அதற்கான தயாரிப்பாக இந்த தொடர் பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் முகமது சிராஜூக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. 



ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய அவர், கவனம் ஈர்க்கும் வகையிலான பந்துவீச்சை வெளிப்படுத்தவில்லை. அதிக ரன்களை விட்டுக்கொடுத்த அவர், இந்திய அணிக்கு திரும்புவதற்கு புதிய ரூட் ஒன்றை கண்டுபிடித்துள்ளார் சிராஜ். இவ்வளவு நாட்களாக விராட் கோலியை புகழ்ந்து கொண்டிருந்த அவர், தற்போது ரோகித் சர்மாவை புகழத் தொடங்கியுள்ளார். 


அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில், ரோகித் சர்மாவுடன் நிறைய போட்டிகளில் விளையாடி உள்ளேன். அவர் பந்துவீச்சாளர்களை சிறப்பாக புரிந்து வைத்திருப்பார். சூழ்நிலைக்கு ஏற்ப பந்துவீச அனுமதிப்பார். ஒருவேளை பந்துவீச்சாளர்களிடம் ஐடியா இல்லை என்றால், அப்போது தான் தன்னுடைய ஐடியாவை கொண்டு வருவார்’ எனத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் ரோகித் கவனத்தை ஈர்த்து அணிக்கு சிராஜ் திரும்புவாரா? என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 


மேலும் படிக்க | இந்திய அணியில் இருந்து விலகிய முக்கிய வீரர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR