இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக இருக்கும் முகமது ஷிமி, மிகவும் ஆடம்பர வாழ்க்கைக்கு சொந்தக்காரர். உ.பி.யின் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள அலிநகர் பகுதியில் முகமது ஷமிக்கு மிக அழகான பண்ணை வீடு உள்ளது. இது சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பண்ணை வீட்டின் விலை 


அலிநகர் பகுதியில் இருக்கும் பண்ணையில் முகமது ஷமி கட்டியிருக்கும் வீட்டின் விலை மட்டும் தோராயமாக 12 முதல் 15 கோடி ரூபாய் இருக்கும். இங்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கிரிக்கெட் பயிற்சிக்கு மட்டுமின்றி, பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்குமாறு பார்த்து பார்த்து வடிவமைத்திருக்கிறார் முகமது ஷமி. 


'ஹசீன்' பண்ணை வீடு


முகமது ஷமியின் இந்த ஃபார்ம் ஹவுஸின் பெயர் 'ஹசீன்' பண்ணை வீடு. முகமது ஷமி தனது கிராமமான சஹாஸ்பூர் அலிநகர் அருகே நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்துள்ளது. மனைவி ஹசீன் ஜஹானின் கொண்ட அன்பால், அந்த பண்ணை வீட்டிற்கு 'ஹசீன் பண்ணை வீடு' என்று பெயரிட்டார்.


மேலும் படிக்க | இந்தியா - ஜிம்பாப்வே மேட்ச்; இந்த டிவியில் இலவசமாக பாருங்கள்


கிரிக்கெட் மைதானம்


ஷமியின் இந்த ஃபார்ம் ஹவுஸில் பயிற்சி வலைகள்  இருக்கின்றன. பல பிட்ச்களையும் அமைத்துள்ளார். கடந்த ஆண்டு லாக்டவுனில், சுரேஷ் ரெய்னா, புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட பல வீரர்கள் அவரது ஃபார்ம் ஹவுஸில் பயிற்சிக்கு வந்திருந்தனர்.


கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத தருணங்களில், பண்ணை வீட்டில் விவசாய பணிகளையும் அவரே செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். பிட்னஸ் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்த வேலைகளை செய்வாராம். 


மேலும் படிக்க | தோனிக்கு இந்த விஷயம் சுத்தமாக பிடிக்காது - ஆர் ஸ்ரீதர் விளக்கம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ