ஐபிஎல் தொடரில் சர்ச்சையை ஏற்படுத்தும் அம்பயர் நிதின் மேனன் யார்?
ஐபிஎல் தொடரில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் அம்பயர் நிதின் மேனன் தான் இப்போதைய கிரிக்கெட் உலகின் ஹாட் டாப்பிக்.
ஐபிஎல் தொடரில் லேட்டஸ்ட்டாக லைம் லைட்டில் சிக்கியிருப்பவர் அம்ப்யர் நிதின் மேனன். டெல்லி மற்றும் ராஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியில் நோபால் கொடுப்பதில் சர்ச்சை ஏற்படுத்தியவர். ஆட்டத்தின் இறுதி ஓவரில் ரோமன் பவல் தொடர்ச்சியாக 3 சிக்சர்களை விளாசியபோது, டெல்லி அணியினர் 3வது பந்தை நோபால் கேட்டு அப்பீல் செய்தனர்.
மேலும் படிக்க | பழைய ஃபார்முக்கு போன ஆர்சிபி - சன்ரைசர்ஸ் அசத்தல் வெற்றி
களநடுவராக இருந்த நிதீன் மேனன் நோபால் கொடுக்க மறுத்ததுடன் 3வது நடுவருக்கும் பரிந்துரைக்க மறுத்தார். அவரின் இந்த செயலால் கடுப்பான டெல்லி அணியின் கேம்ப், மைதானத்துக்குள்ளேயே நுழைந்தது. அதாவது டெல்லி அணியின் இணை பயிற்சியாளரான பிரவீன் அம்ரே, மைதானத்துக்குள் சென்று 3வது நடுவருக்கு பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், அவரின் கோரிக்கையை திட்டவட்டமாக மறுத்த நிதீன் மேனன் மீது டெல்லி கேப்டன் ரிஷப் பன்டும் கடுப்பானார்.
மேட்ச் முடிந்தபிறகு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். பெங்களூரு வீரர் மேக்ஸ்வெல் கூட நிதீன் மேனன் மீது டிவிட்டரில் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். நிதீன் மேனன் சர்ச்சையில் சிக்குவது இது முதன்முறையல்ல. ஏற்கனவே சில சர்ச்சைக்குரிய முடிவுகளால் அவர் மீது வீரர்களும் ஐபிஎல் நிர்வாகமும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். ஒருமுறை சென்னை மற்றும் மும்பை அணிகள் ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, வைட் கொடுக்க நிதீன் மேனன் மறுத்தார்.
மிகவும் அகலமாக சென்ற அந்த பந்துக்கு நிதீன் மேனன் வைட் கொடுக்க மறுத்ததால் கடுப்பான பொல்லார்டு, ஸ்டம்புகளை விட்டு வைட் லைனில் சென்று பேட்டிங் செய்தார். இது அப்போது பெரும் சர்ச்சையாக உருவாகி, பொல்லார்டு அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல், தொடர்ந்து நிதீன் மேனனின் சர்ச்சையை உருவாக்கிக் கொண்டே இருப்பதால், ஐபிஎல் அம்பயர் பேனலில் இருந்து அவரை நீக்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். இவ்வளவு சர்ச்சையில் சிக்கியிருக்கும் நிதீன் மேனனும் ஒரு கிரிக்கெட் வீரர் தான். மகாராஷ்டிரா அணிக்காக முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இனிமேலாவது சர்ச்சையில் சிக்காமல் இருப்பாரா? அல்லது அவரை சுற்றிய சர்ச்சைகள் தொடருமா? என்பதை, அவருடைய அடுத்தடுத்து நடவடிக்கை மூலம் தெரியவரும்.
மேலும் படிக்க | IPL2022: டாப் கியரில் போகும் குஜராத் டைட்டன்ஸ்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR