இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனிக்கு சக வீரர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதில் டோனியின் சாதனைகளை குறிக்கும் வகையில் 4- சில்வர் ஸ்டார் பரிசு அளித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா வந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு போட்டியின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனில் இருந்தது. இவ்விரு அணிகள் மோதிய 3-வது டி-20 போட்டி பெங்களூருவில் நேற்று நடந்தது.


இந்த போட்டி துவங்கும் முன் முன்னாள் கேப்டன் டோனியின் சாதனைகளை பாராட்டும் விதமாக ஹோட்டல் ரூமில் இந்திய அணியின் வீரர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டு டோனியின் சாதனையை குறிக்கும் வகையில் அவருக்கு 4- சில்வர் ஸ்டார் பரிசு வழங்கப்பட்டது.



இந்த நான்கு ஸ்டார்கள் டோனியின் சாதனைகளான மூன்று உலக கோப்பைகள் 2007 டி-20, 2011 50-ஓவர், 2013 சாம்பியன் டிராபி மற்றும் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணி என்ற அந்தஸ்தைப் பெற்றுத்தந்ததை குறிக்கும் விதத்தில் செய்யப்பட்டுள்ளது.