தோனி எனது அண்ணன் மாதிரி: ஹர்திக் பாண்டியா பெருமிதம்!
ஹர்திக் பாண்டியா தோனியை தனது சகோதரர், நண்பர், என் குடும்பத்தில் குடும்பம் மற்றும் என்னுடைய முன்மாதிரி என்று புகழ்ந்துள்ளார்.
கேப்டன்சி பொறுப்பு தனது ஆட்டத்தை பாதிக்க விடவில்லை, மாறாக அதில் இன்னும் ஆர்வத்தை அதிகரித்து உள்ளது என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். பல நாட்களாக காயத்தால் அவதிப்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்து தனது அணியை ஐபிஎல் பைனல் போட்டிக்கு கொண்டு சென்றுள்ளார், மேலும் இந்திய அணியில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணியை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற பிறகு, தோனியைப் பற்றி ஹர்திக் பாண்டியா பேசினார்.
மேலும் படிக்க | சவ்ரவ் கங்குலி பயோபிக்: இயக்கப்போவது ரஜினியின் மகளா?!
“எனது வாழ்க்கையில் மஹி பாய் ஒரு பெரிய பாத்திரத்தை வகித்துள்ளார். அவர் எனக்கு அன்பான சகோதரர், அன்பு நண்பர், குடும்பத்தில் ஒருவர். அதனால், என்னைப் பொறுத்தவரை, அவரிடம் இருந்து நிறைய நல்ல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். நான் தற்போது பேட்டிங் மற்றும் பவுலிங்கில் மிகவும் பிட் ஆகா உள்ளேன். எனது கேப்டன்சி எனது ஆட்டத்தை பாதிக்கவில்லை. இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். கேப்டன் பதவிக்கு முன்பு, எல்லா சூழ்நிலையையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் மனதளவில் தயார் ஆனேன்" என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்ற பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.
டைட்டன்ஸ் கேப்டனாக ஹர்திக் நியமனம் செய்யப்பட்ட பிறகு பலர் இது தவறான முடிவு என்று விமர்சித்து வந்தனர். பல நாட்களாக கிரிக்கெட் ஆடாத ஒருவரை குஜராத் அணி கேப்டன் ஆக்கி உள்ளது. இவருக்கு பதிலாக வேறு வீரரை வைத்து இருக்கலாம் என்று சிலர் கூறினர். இதற்கெல்லாம் பதில் அடி கொடுக்கும் விதமாக தற்போது ஹர்திக் தனது அணியை ஐபிஎல் 2022 பைனலுக்கு அழைத்து சென்றுள்ளார். எலிமினேட்டர் மற்றும் குவாலிபயர் 2வில் வெற்றி பெரும் அணியுடன் வரும் மே 29ம் தேதி அகமதாபாத்தில் விளையாட உள்ளது.
மேலும் படிக்க | ஐபிஎல் சுவாரஸ்யங்கள்: 4வது இடத்தில் இருக்கும் அணி கோப்பை வென்றது இல்லையா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR