மகேந்திர சிங் டோன அவராய் ஓய்வு பெறாவிட்டால், இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து அவருக்கான இடம் புறக்கணிப்பது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி. இந்தியாவுக்கு 2 உலகக் கோப்பையை வென்று பெருமை சேர்த்தவர். ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர், தற்போது ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.


நடந்து முடிந்த உலக கோப்பை தொடரை அடுத்து, 38 வயதாகும் டோனி ஓய்வு பெறுவார் என்று அனைவராலும் எதிர் பார்க்கப்பட்டது. எனினும் டோனி தனது ஓய்வு குறித்த அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை. இதற்கிடையில் உலகக் கோப்பை போட்டியில் அவரது ஆட்டம் குறித்து கடுமையாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.


ஒருவேளை அடுத்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை வரை விளையாட டோனி திட்டமிட்டு இருகலாம் என தெரிகிறது.


இதற்கிடையே டோனி ஓய்வு பெறாவிட்டால் அவரை அணியில் சேர்க்காமல் புறக்கணிப்பது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் டோனியை ஓரங்கட்டுவது என கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை மேற்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. தேர்வு குழு தலைவர் எம்.கே.பிரசாத் இது தொடர்பாக டோனியிடம் பேசுவார். அவரிடம் தானாக ஓய்வு பெறுமாறு வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது.


இந்த நெருக்கடி காரணமாக டோனி தனது ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.