MS Dhoni: நண்பரின் உயிர் காக்க ஹெலிகாப்டரை அனுப்பினார் தோனி, உயிர் பிழைத்தாரா நண்பர்?
தோனி இந்திய அணியுடன் ஒரு சுற்றுப்பயணத்தில் செல்லவிருந்தபோது, சந்தோஷின் உடல்நிலை குறித்து அவருக்குத் தெரிய வந்தது. ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு சந்தோஷை அழைத்துச் செல்ல தோனி உடனடியாக ஒரு விமான ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தார். சந்தோஷின் உயிரைக் காப்பாற்ற முடிந்ததா?
MS Dhoni News: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி உலக அளவில் மிகவும் பிரபலமானவர். கிரிக்கெட் ரசிகர்கள் அவரது ஹெலிகாப்டர் ஷாட்டை மிகவும் விரும்பி ரசிக்கிறார்கள். ஆனால் தோனியின் அந்த ஹெலிகாப்டர் ஷாட்டுக்கு பின்னால் வேறு ஒருவர் உள்ளார் என்பது சிலருக்குத்தான் தெரியும்.
மகேந்திர சிங் தோனி (MS Dhoni) உலக கிரிக்கெட்டில் சிறந்த மேட்ச் ஃபினிஷர் என்று அழைக்கப்படுகிறார். இந்த ஹெலிகாப்டர் ஷாட்டை தோனிக்கு கற்பித்தவர் யார் என்று எவ்வளவு பேருக்குத் தெரியும்?
தோனியின் நண்பர் அவருக்கு ஹெலிகாப்டர் ஷாட்டை கற்றுக் கொடுத்தார்
தோனியின் குழந்தை பருவ நண்பர் சந்தோஷ் லால் என்பவர்தான் அவருக்கு ஹெலிகாப்டர் ஷாட் விளையாட கற்றுக் கொடுத்தார். தோனியும் சந்தோஷும் சிறுவயதிலிருந்தே ஒன்றாக கிரிக்கெட் (Cricket) விளையாடுவார்கள். இருவரும் கிரிக்கெட் விளையாடுவதற்கு டென்னிஸ் பந்துகளைப் பயன்படுத்தினார்கள். மாநிலம் முழுவதும் இருவரும் ஒன்றாக பயணம் செய்தனர்.
சந்தோஷின் பேட்டிங்கை தோனி மிகவும் விரும்பினார். சந்தோஷ் ஒரு அச்சமற்ற பேட்ஸ்மேன். அவர்தான் ஹெலிகாப்டர் ஷாட் விளையாட தோனிக்கு கற்றுக் கொடுத்தார். சந்தோஷிடமிருந்து ஹெலிகாப்டர் ஷாட்களை கற்றுக்கொள்வதற்கு பதிலாக தோனி அவருக்கு சூடான சமோசாக்களை வாங்கிக் கொடுப்பாராம்.
ALSO READ: கோலி கூறிய இந்த வார்த்தை, தோனி - கோலி ரசிகர்கள் நெகிழ்ச்சி!
சந்தோஷ் கற்றுக்கொடுத்த ஹெலிகாப்டர் ஷாட்
சந்தோஷ் மற்றும் தோனி இருவரும் குழந்தை பருவத்திலிருந்தே சிறந்த நண்பர்களாக இருந்தனர். இருவரும் ரயில்வேயில் பணிபுரிந்தனர். சந்தோஷ் ஹெலிகாப்டர் ஷாட்டை விளையாடுவதை தோனி முதலில் பார்த்தபோது, அவர் உடனடியாக இந்த ஷாட் பற்றி சந்தோஷிடம் கேட்டார். சந்தோஷ் இந்த ஷாட்டை 'ஸ்லாப் ஷாட்' என்று அழைத்தார். ராஞ்சியில் தோனியும் சந்தோஷும் டென்னிஸ் பந்துடன் கிரிக்கெட் விளையாடுவார்கள்.
விதி உயிரைப் பறித்தது
சந்தோஷுக்கு கணையத்தில் அழற்சி நோய் இருந்தது. தோனி இந்திய அணியுடன் (Team India) ஒரு சுற்றுப்பயணத்தில் செல்லவிருந்தபோது, சந்தோஷின் உடல்நிலை குறித்து அவருக்குத் தெரிய வந்தது. ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு சந்தோஷை அழைத்துச் செல்ல தோனி உடனடியாக ஒரு விமான ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தார். ஆனால் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் வாரணாசியில் தரையிறங்க வேண்டியதாயிற்று. அதற்குள் சந்தோஷின் உடல்நிலை மிகவும் மோசமானது. ஹெலிகாப்டரில் வந்த ஏம்புலன்சின் உதவி வரும் வரை அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 32 வயதான சந்தோஷ் இந்த உலகை விட்டு பிறிந்தார்.
சரியான நேரத்தில் தனது நண்பனின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என்ற துக்கம் இன்றும் தோனிக்கு உள்ளது.
ALSO READ: MS Dhoni-யின் மறைந்த முன்னாள் காதலியின் போட்டோ வைரல்: அவர் இறந்தது எப்படி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR