Virat on Dhoni: உடற்பயிற்சி சோதனையில் ஓடுவது போல் ஓடச் செய்தவர் தோனி

விராட் கோலியும் தோனியும் இணைந்து பல ஆட்டங்களில் கலக்கியிருக்கிறார்கள். விராட்-தோனி இணை 2016 T20 அரையிறுதி போட்டிக்கான தகுதிச்சுற்றில் அபாரமாக ஆடி இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றியது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 11, 2021, 12:06 PM IST
  • விக்கெட்டுகளுக்கு இடையில் வேகமாக ஓடுவதில் பிரபலமானவர் எம்.எஸ்.தோனி
  • விராட் கோலியும் தோனியும் இணைந்து பல ஆட்டங்களில் கலக்கியிருக்கிறார்கள்
  • இந்த இணை 2016 T20 அரையிறுதி போட்டிக்கான தகுதிச்சுற்றில் அபாரமாக ஆடி இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றியது
Virat on Dhoni: உடற்பயிற்சி சோதனையில் ஓடுவது போல் ஓடச் செய்தவர் தோனி title=

விக்கெட்டுகளுக்கு இடையில் வேகமாக ஓடுவதில் பிரபலமானவர் எம்.எஸ்.தோனி. விராட் கோலியும் தோனியும் இணைந்து பல ஆட்டங்களில் கலக்கியிருக்கிறார்கள். அப்படியொரு வரலாற்று சிறப்புமிக்க ஆட்டத்தில் இருவரும் ஒன்றாக பேட்டிங் செய்தது தொடர்பான விராட் கோலியின் கருத்து வைரலாகிறது.

இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான 2016 ஐசிசி டி 20 உலகக் கோப்பை மொஹாலியில் நடைபெற்றது. அது மிகவும் பிரபலமான போட்டி, ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நினைவிலும் மறக்க முடியாத போட்டி.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 160 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி, தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்ததால், அழுத்தத்தில் இருந்தது.

Also Read | இடுப்பு துண்டை கழற்றிய Chris Gayle மீது பாலியல் குற்றச்சாட்டு!

யுவராஜ் சிங்-விராட் கோலி இருவரும் இணைந்து் விளையாடிக் கொண்டிருந்தனர். 21 ரன்கள் எடுத்த நிலையில் யுவராஜ் சிங் அவுட்டானார். கேப்டன் மகேந்திர சிங் தோனி, விராட் கோலியுடன் இணைந்தபோது இந்திய அணி கடைசி 6 ஓவர்களில் 67 ரன்கள் தேவை என்ற கடுமையான அழுத்தத்தில் இருந்தது.

ஆட்டத்தை புரட்டிப் போடும் அளவுக்கு மிகவும் திறமையாக விளையாடி கோலி, ஆஸ்திரேலிய பந்துவீச்சுக்கு எதிராக தாக்குதல் நடத்தினார். அவருடன் இணைந்த தோனியும் இணைந்து அபாரமாக ஆடி இந்தியாவை வெற்றியடையச் செய்தனர். 2016 ICC உலகக்கோப்பை போட்டித் தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெறவும் உதவியது.

அந்த மறக்கமுடியாத விளையாட்டு முடிந்த மூன்று வருடங்களுக்குப் பிறகு, கோஹ்லி அந்த உருவத்தையும் விளையாட்டைப் பற்றிய தனது எண்ணங்களையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார்.

Also Read | நான் கேப்டனாவேன் என எதிர்பார்த்தேன்-யுவராஜின் பெரிய வெளிப்பாடு

தோனியை பற்றி வியக்கும் விராட், ரன்கள் எடுக்கும்போது, 'உடற்பயிற்சி சோதனை' போன்ற தகுதிப் போட்டிகளில் ஓடுவது போல ஓடச் செய்தார் தோனி என்று தெரிவித்துள்ளார்.

"என்னால் ஒருபோதும் மறக்க முடியாத ஒரு போட்டி அது. சிறப்பான இரவு. தோனி, என்னை ஒரு உடற்பயிற்சி சோதனையில் ஓடுவது போல ஓடச் செய்தார்" என்று கோஹ்லி தனது ட்வீட்டில் எழுதினார்.

விக்கெட்டுகளுக்கு இடையில் வேகமாக ஓடுபவர்களில் ஒருவராக அறியப்பட்ட தோனி, அன்றைய தினத்தை சிறப்பானதாக மாற்றினார், விராட்-தோனியின் அபார ஓட்டமே, 6 ஓவர்களில் 67 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்த இந்தியா, ஐந்து பந்துகள் மீதமுள்ள நிலையில் ஆட்டத்தை முடிக்க வழிவகுத்தது.

Also Read | 2020-21-ம் ஆண்டில் நடைபெற்ற இந்தியா- ஆஸ்திரேலியா தொடர், உலகின் Best Test Series-ICC

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News