India vs New Zealand: நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரு அணிகளும் விளையாடிய நிலையில், 3-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரோஹித் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியிருந்தாலும், இந்தாண்டு நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு சுமார் 30க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளை இந்திய அணி விளையாட உள்ளது. எனவே, அடுத்த கட்டமாக ரோஹித், விராட் கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்களை டி20 போட்டிகளில் பிசிசிஐ ஓய்வளித்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து வருவதாக தெரிகிறது. 


மேலும் படிக்க | Australian Open: இறுதிப்போட்டியில் சானியா மிர்சா - ரோகன் போபண்ணா


அந்த வகையில், டி20 அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார். சமீபத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான டி20 தொடரையும் அவரே வழிநடத்தி, கோப்பையை கைப்பற்றினார். தொடர்ந்து, நியூசிலாந்துக்கு எதிரான இந்த தொடரையும் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் ஹர்திக் படை காத்திருக்கிறது. 



அப்படி வெறியில் இருக்கும் வீரர்களுக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கும் வகையில், இந்திய அணியின் பயிற்சியின்போது, முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனியின் சர்ப்ரைஸ் விஸிட் அளித்துள்ளது எனலாம். ராஞ்சியில் நாளை நடைபெற உள்ள முதல் டி20 போட்டியை முன்னிட்டு, இந்திய அணி JSCA சர்வதேச மைதானத்தில் இன்று பயிற்சி மேற்கொண்டு வந்தனர்.


அப்போது, பயிற்சியில் இருந்த இந்திய வீரர்கள் தோனி இன்று சந்தித்து உரையாடினார். இதன் வீடியோவை பிசிசிஐ ட்விட்டரில் பகிர்ந்தது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தோனி, கேப்டன் ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் ஆகியோருடன் உரையாடுவது தெரிகிறது. முன்னதாக, கேப்டன் தோனியுடன் பைக்கில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை ஹர்திக் பாண்டியா இன்று இணையத்தில் பகிர்ந்திருந்தார். இந்த தொடருக்கு பின் இந்தியா, ஆஸ்திரேலியா அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க | Republic Day: ராணுவ உடையில் ஜொலித்த இந்திய கிரிக்கெட் பிரபலங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ