Rohit Sharma Equaled Ricky Ponting Record: நியூசிலாந்துக்கு எதிரான இந்தூரில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அபார சதம் அடித்து ரசிகர்களின் நீண்ட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஜனவரி 19, 2020 முதல், ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோஹித்தின் பேட் மூன்று இலக்கங்களில் ரன்கள் அடிக்கவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோஹித் 30வது சதம் அடித்துள்ளார். இதன் மூலம் ரிக்கி பாண்டிங்கின் ஒருநாள் சதங்கள் சாதனையை ரோஹித் சமன் செய்தார். அதேபோல இதே காலகட்டத்தில் ஹிட்மேனின் மட்டையிலிருந்து பல அரை சதங்கள் அடிக்கப்பட்டன. இன்றைய ஆட்டத்தில் அவரின் அதிரடியை பார்க்கும் போது இரட்டை சதம் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், 85 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 6 சிக்ஸர்கள் 9 பவுண்டரிகளும் அடங்கும்.
நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் சதம் அடித்ததின் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். அவரும் ஆஸ்திரேலியாவின் சிறந்த பேட்ஸ்மேன் ரிக்கி பாண்டிங்கும் தலா 30-30 சதங்கள் என தங்கள் பெயரில் வைத்துள்ளனர். சர்வதேச அரங்கில் ரோஹித் சர்மாவின் 42 சதம் ஆகும். ரோஹித் சர்மா கடைசியாக 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் அடித்தார். ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த இலங்கையின் சனத் ஜெயசூர்யாவின் (270 சிக்ஸர்கள்) சாதனையை ரோஹித் சர்மா இந்தப் போட்டிக்கு முன்பாகவே 267 சிக்சர்களை அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Talk about leading from the front
A magnificent century from #TeamIndia captain @ImRo45
Follow the match https://t.co/ojTz5RqWZf…#INDvNZ | @mastercardindia pic.twitter.com/iR3IJH3TdB
— BCCI (@BCCI) January 24, 2023
மேலும் படிக்க: IND vs NZ: ரோஹித், கோலி இனி டி20 அணியில் இல்லை? டிராவிட் சொன்ன முக்கிய தகவல்!
27வது ஓவரின் முதல் பந்தை ரோஹித் சர்மா தவறவிட்டதால், டிக்னரின் பந்து ஸ்டம்பை பதம் பார்த்தது. இதன்மூலம் ரோஹித்தின் சிறப்பான இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. மறுபுறம், ஷுப்மான் கில் 72 பந்துகளில் சதம் அடித்தார். கடந்த 4 போட்டிகளில் கில் அடித்த மூன்றாவது சதம் இதுவாகும். இன்றைய ஆட்டத்தில் 78 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 13 பவுண்டரிகளுடன் அவர் 112 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
CENTURY number in ODI cricket for @ShubmanGill!
The #TeamIndia opener is in supreme form with the bat
Follow the match https://t.co/ojTz5RqWZf…#INDvNZ | @mastercardindia pic.twitter.com/OhUp42xhIH
— BCCI (@BCCI) January 24, 2023
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் அதிக சதம் அடித்தவர் என்ற உலக சாதனையை படைத்து 49 சதங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதற்கு அடுத்த இடத்தில் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி 46 சதங்களுடன் உள்ளார்.
முன்னதாக, டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்பின்னர் களம் இறங்கிய இந்திய அணி தொடக்க வீரர்கள் ஆரம்ப முதலே அதிரடியில் இறங்கினர். இவர்கள் அவுட் ஆகி வெளியேறியதும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், விராட் கோலி, இஷான் கிஷான், சூர்யா குமார் யாதவ் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி 54 (38) ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 385 ரன்கள் அடித்தது.
Innings Break
A mighty batting display from #TeamIndia!
for @ShubmanGill
for captain @ImRo45
for vice-captain @hardikpandya7Over to our bowlers now
Scorecard https://t.co/ojTz5RqWZf#INDvNZ | @mastercardindia pic.twitter.com/JW4MXWej4A
— BCCI (@BCCI) January 24, 2023
மேலும் படிக்க: Ind vs Nz: 3வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றால்..! இந்திய அணி செய்யப்போகும் சாதனை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ