இன்றைய காலகட்டத்தில், CSK கேப்டன் எம்.எஸ்.தோனியை (MS Dhoni) விட எளிமையான ஒரு கிரிக்கெட் வீரர் இருக்கிறாரா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவரது மனிதாபிமானத்தை எடுத்துக்காட்டும் பல நிகழ்வுகளை நாம் கண்டுள்ளோம். அப்படிப்பட்ட மற்றொரு நிகழ்வு தற்போது நடந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IPL-ன் 13 வது பதிப்பில் கலந்துகொள்ள, எம்.எஸ். தோனி, CSK-வின் வீரர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் சென்னையிலிருந்து UAE-க்குச் செல்ல விமானத்தில் ஏறினர்.


பயணத்தின் போது, தோனி தனது பிஸ்னஸ் கிளாஸ் இருக்கையை எகானமி கிளாஸ் பயணியுடன் மாற்றிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்த பயணியின் கால்கள் மிகவும் நீளமாக இருந்ததையும், அவரால் எகானமி கிளாஸ் இருக்கையில் வசதியாக அமர முடியவில்லை என்பதையும் தோனி கவனித்துள்ளார். ஆகையால் தனது பிஸ்னஸ் கிளாஸ் இருக்கையை அவருடன் தோனி மாற்றிக்கொண்டார். இதை காண்பிக்கும் வீடியோ ஒன்றை ஜார்ஜ் என்ற ட்விட்டர் பயனர் பதிவேற்றியுள்ளார். இந்த ட்வீட் சூப்பர் கிங்ஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் அகௌண்டாலும் ‘லைக்’ செய்யப்பட்டுள்ளது.


“அனைத்தையும் பார்த்துவிட்ட, அனைத்தையும் சாதித்துவிட்ட ஒரு மனிதர் வந்து, ‘உங்கள் கால்கள் மிக நீளமாக உள்ளன, என் இருக்கையில் (பிசினஸ் கிளாஸ்) உட்கார்ந்து கொள்ளுங்கள், நான் எகானமி கிளாசில் உட்கார்ந்து கொள்வேன்' என்று சொல்லும்போது….. ஆச்சரியப்பட்டேன்… கேப்டன் நீங்கள் என்னை எப்போதும் அச்சரியத்தில் ஆழ்த்துகிறீர்கள். @msdhoni ” என அவர் ட்வீட் செய்துள்ளார்.



வீடியோவில், தோனி எகானமி கிளாசில் அமர்ந்து சுரேஷ் ரெய்னா மற்றும் அவரது சில csk நண்பர்களுடன் அரட்டை அடிப்பதைக் காண முடிகிறது.


பல ஆண்டுகளாக, பல கிரிக்கெட் வீரர்கள் தோனியின் பெருந்தன்மையைப் பற்றி விவரித்திருக்கிறார்கள். 39 வயதான தோனி, நாட்டின் மிகவும் விரும்பப்படும் விளையாட்டு வீரர்களில் ஒருவராக இருக்கிறார். கிரிக்கெட் மைதானத்தில் இறுக்கத்தை சந்திக்கும் போதும், ஒரு தந்தையாகவும், ஒரு கணவராகவும் செவ்வனே தன் கடமைகளைச் செய்யும் போதும், தோனி, எளிமையின் மறு பெயராக இருகிறார். அதுவே அவருக்கு தனித்துவமான புகழையும் தந்துள்ளது. சமீபத்தில் தனது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, இந்த IPL சீசனில் அனைவரது கவனத்தின் மையப்புள்ளியாக நிச்சயம் இருப்பார்.


ALSO READ: IPL 2020: தல தோனியுடன் UAE-க்கு புறப்பட்டது CSK டீம்!!


CSK கேப்டன் ஏற்கனவே கடந்த 12 ஆண்டுகளில் மூன்று முறை IPL பட்டங்களை வென்றுள்ளார். நான்காவது வெற்றிக்காக CSK அணி காத்துக்கொண்டிருக்கிறது.


IPL-ல் அவர் எவ்வளவு ஆண்டுகள் இன்னும் விளையாடுவார் என்பது குறித்தும் கேள்விகள் எழும்பி வருகின்றன. இந்நிலையில், இவ்வாண்டு UAE-ல் நடக்கும் IPL போட்டிகளில் தோனி தலைமையில் CSK அணி கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கிறார்கள். 


ALSO READ: IPL இல் சாம்பியன் ஆகாத இந்த 3 அணிகள், காரணம் என்ன?