புதுடெல்லி: IPL பல புதிய வீரர்களுக்கு புதிய வாழ்வை அளித்துள்ளது. பல அணிகளில் பல வீர்ரகளுக்கான தேவை இருப்பதால், பல இளம் வீரர்களுக்கு தங்கள் திறமையைக் காட்ட பல வாய்ப்புகள் கிடைத்துள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் (CSK) வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், பவர் பிளேவின் ஒரு மிகச்சிறந்த பந்துவீச்சாளராகியுள்ளார். இந்த வெற்றிக்கான முழு காரணமும் எம்.எஸ்.தோனிதான் என்று அவர் கூறியுள்ளார். இந்திய அணியின் கேப்டன் தோனிக்கு இதற்கான பெருமையை அவர் அளித்துள்ளார். இலங்கையில் நடைபெறும் வரையறுக்கப்பட்ட ஓவர் தொடரில் சாஹருக்கு இடம் கிடைக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது. 


தோனி என்னை திட்டினார்: சாஹர்
ஒரு ஊடகத்துடன் பேசிய தீபக் சாஹர், "தோனிதான் என்னை ஒரு பவர் பிளே பந்து வீச்சாளராக மாற்றினார். நீங்கள் ஒரு சிறந்த பவர் பிளே பந்து வீச்சாளர் என்று அவர் எப்போதும் என்னிடம் கூறுவார். அவர் பெரும்பாலும் போட்டியின் முதல் ஓவரை எனக்குத் தருவார். அவர் என்னை நன்றாக திட்டியுள்ளார். ஆனால் எனக்கு அதற்கான காரணம் தெரியும். அவர் என்னை திட்டியதில் எனக்கு பல வழிகாட்டுதல்கள் கிடைத்துள்ளன. இந்த வழிகாட்டுதல்களால் எனக்கு பல நன்மைகள் கிடைத்துள்ளன. அவரது வார்த்தைகள்தான் நான் ஒரு பந்து வீச்சாளராக வளர எனக்கு உதவின." என்று கூறியுள்ளார்.


ALSO READ: MS Dhoni-யின் மறைந்த முன்னாள் காதலியின் போட்டோ வைரல்: அவர் இறந்தது எப்படி?


தோனியின் புகழ் பாடினார் சாஹர் 
தீபக் சாஹர், IPL 2021 இல் புதிய பந்தை வீசும் வகையில் முதல் ஓவர்களை வீசினார். அவர் இந்த போட்டிகளில் பல விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இரண்டு முறை ஒரே போட்டியில் அவர் நான்கு விக்கெட்டுகளை எடுத்தார்.


எம்.எஸ். தோனியின் (MS Dhoni) புகழ் பாடினார் தீபக் சாஹர். தோனியைப் பற்றி கூறிய சாஹர், 'தோனியின் தலைமையில் விளையாடுவது ஆரம்பத்தில் இருந்தே எனது கனவாக இருந்தது. அவரது தலைமையின் கீழ் நான் பல விஷயங்களை கற்றுக்கொண்டுள்ளேன். அவரது வழிகாட்டுதலின் கீழ் எனது விளையாட்டை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளேன். அவர் எப்போதும் எனக்கு ஆதரவளித்து வருகிறார். எப்படி பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அவர் எனக்குக் கற்றுக் கொடுத்தார். பவர் பிளேயில் மூன்று ஓவர்களை வீச எங்கள் CSK அணியில் யாரும் இல்லை.


தோனியின் காரணமாகத்தான் நான் பல புதிய விஷயங்களை செய்து வருகிறேன். அணிக்கு முதல் ஓவரை வீசுவது எளிதான காரியமல்ல. காலப்போக்கில் நானும் மேம்பட்டுள்ளேன். ரன்களின் வேகத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதைக் கற்றுக்கொண்டேன். குறிப்பாக டி 20 போட்டிகளில் பல விஷயங்களை தோனி எனக்கு கற்றுக்கொடுத்துள்ளார்.' என்று கூறினார்.


ALSO READ: CSK contract கிடைத்தவுடன் தோனியின் ரியாக்ஷன் எப்படி இருந்தது? சுரேஷ் ரெய்னா கூறுகிறார்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR