ஸ்டம்புக்கு பின்னால் எம்.எஸ். தோனியை மிகவும் மிஸ் செய்கிறேன்: குல்தீப் யாதவ்

மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்ற பிறகு, குல்தீப் யாதவுக்கு இந்திய அணியில் விளையாட மிகக் குறைந்த வாய்ப்புகளே கிடைத்தன. IPL 2021-லும் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 

Written by - ZEE Bureau | Last Updated : May 12, 2021, 05:11 PM IST
  • தோனி ஓய்வு பெற்றவுடன் பல விஷயங்கள் மாறிவிட்டன - குல்தீப் யாதவ்.
  • நான் தோனியை மிஸ் செய்கிறேன் - குல்தீப் யாதவ்.
  • தோனி ஓய்வு பெற்ற பிறகு, குல்தீப் யாதவுக்கு இந்திய அணியில் விளையாட மிகக் குறைந்த வாய்ப்புகளே கிடைத்தன.
ஸ்டம்புக்கு பின்னால் எம்.எஸ். தோனியை மிகவும் மிஸ் செய்கிறேன்: குல்தீப் யாதவ்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் சில காலமாக இந்திய அணியில் ஆடாமல் உள்ளார். கடந்த சில போட்டிகளில் அவர் அணியில் சேர்க்கப்படுவதும் நீக்கப்படுவதுமாக உள்ளார். 

ஒரு சமயத்தில் யுஸ்வேந்திர சாஹலுடனான அவரது ஜோடி சூப்பர்ஹிட் ஜோடியாக இருந்தது. ஆனால் இப்போது இந்த இரு சுழற்பந்து வீச்சாளர்களாலும் இந்திய அணியில் தங்களுக்கென ஒரு இடத்தைப் பிடிக்க முடியவில்லை. 

தோனியை மிஸ் செய்கிறார் குல்தீப் யாதவ் 

மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அனைத்துமே மாறி விட்டது என்றார் குல்தீப் யாதவ். ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், குல்தீப் யாதவ், 'எனக்கு தோனியின் (MS Dhoni) நினைவு அடிக்கடி வரும். அவர் ஸ்டம்புக்கு பின்னாலிருந்து எங்களிடம் ஏதாவது சொல்லிக்கொண்டிருப்பார், ஏதாவது ஆலோசனை கூறிக்கொண்டிருப்பார்." என்றார். 

ALSO READ: கொரோனா உறுதியானால் இங்கிலாந்து சுற்றுப் பயணம் கிடையாது, BCCI கடும் எச்சரிக்கை

குல்தீப் யாதவுக்கு விளையாட சில வாய்ப்புகளே கிடைத்தன 

குல்தீப் யாதவ் கூறுகையில், 'தோனி பாய்க்கு மிகப்பெரிய அனுபவம் உண்டு. தோனி அணியில் இருந்தபோது நானும் சாஹலும் ஒன்றாக விளையாடுவோம். அவர் ஓய்வு பெற்றதிலிருந்து நானும் சாஹலும் ஒன்றாக விளையாடவில்லை. தோனி ஓய்வு பெற்றதிலிருந்து நான் மிக சில போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளேன். நானும் ஒரு ஹாட்ரிக் கூட எடுத்தேன்." என்றார்.

நான் தோனியை அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன் - குல்தீப் யாதவ் 

குல்தீப் யாதவ், "நான் தோனி பாயை மிஸ் செய்கிறேன். அவரது அனுபவத்தை நான் மிஸ் செய்கிறேன். ரிஷப் இப்போதுதான் தன் துவக்க நிலையில் உள்ளார். அவர் அதிக போட்டிகளில் விளையாட விளையாட, ஸ்டம்புக்கு பின்னாலிருந்து பந்துவீச்சாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கும் திறமையும் அவருக்கு அதிகரிக்கும். ஒவ்வொரு பந்து வீச்சாளருக்கும் மறுமுனையில் ஒரு சரியான ஜோடி தேவை என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது."  என்று கூறினார். 

மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்ற பிறகு, குல்தீப் யாதவுக்கு இந்திய அணியில் (Team India) விளையாட மிகக் குறைந்த வாய்ப்புகளே கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. மிகக் குறைந்த வாய்ப்புகள் காரணமாக குல்தீப் யாதவ் நீண்ட காலமாக மிகுந்த நிராசையுடனும் உற்சாகமின்றியும் உள்ளார். IPL 2021-லும் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 

ALSO READ: IPL 2021: CSK அணியின் உருக்கமான வீடியோ, சோகத்தில் ரசிகர்கள்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News