MS Dhoni Sathyam Cinemas: 17ஆவது ஐபிஎல் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமான தொடக்க விழா நிகழ்ச்சிகளுடன் ஐபிஎல் தொடர் தொடங்கிய நிலையில், முதல் போட்டியில் ஐந்து முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று தொடரை வெற்றியுடன் தொடங்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடுத்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணி நாளை மறுதினம் (மார்ச் 26) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இதையடுத்து அடுத்த இரண்டு போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விசாகப்பட்டினத்திலும், ஹைதராபாத்திலும் விளையாட இருக்கிறது. இன்னும் மற்ற போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகவில்லை. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் விரைவில் மற்ற போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகும் என தெரிகிறது.


மேலும் படிக்க | பதிரானா வந்தாச்சு... இனி சிஎஸ்கேவில் 'இந்த' பிரச்னை இருக்காது - வெளியேறப் போவது யாரு?


சத்யம் தியேட்டரில் தல தோனி...


அந்த வகையில், கடந்த 20 நாள்களுக்கும் மேலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் சென்னையில் தான் முகாமிட்டுள்ளனர். சென்னையில் தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் வீரர்கள் தங்கியிருக்கும் நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்வார்கள். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான மகேந்திர சிங் தோனி, வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார் மற்றும் அணி நிர்வாகத்தினர் சிலர் நேற்றிரவு சத்யம் சினிமாஸ் திரையரங்கில் திரைப்படம் காண வந்துள்ளனர். 


சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தை தோனி பார்க்க வந்தார் என தகவல்கள் பரவிய நிலையில், அவர் 'யோதா' (Yodha) என்ற பாலிவுட் திரைப்படத்தையே பார்த்துள்ளார் என கூறப்படுகிறது. தோனி, தீபக் சஹார் உள்ளிட்டோர் இரவில் படம் பார்த்துவிட்டு காரில் ஏறிச்செல்லும்போது, திரையரங்க வளாகத்தில் நூற்றுக்கணக்கில் ரசிகர்கள் குவிந்து 'தோனி, தோனி' என கோஷம் எழுப்பினர். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது. 



தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் சீசன் என சொல்லப்படுகிறது. இதுவரை தோனி தலைமையில் சிஎஸ்கே அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த வகையில் இம்முறையும் தோனி தலைமையில் 6 கோப்பையை வெல்லும் என எதிர்பார்த்திருந்த சூழலில், முதல் போட்டிக்கு முந்தைய நாள் சிஎஸ்கே கேப்டன்ஸி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 



தோனி விலகலை தொடர்ந்து ஓப்பனர் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்ஸி பொறுப்பை பெற்றுள்ளார். தோனியின் தலைமையில் மொத்தம் 14 சீசன்கள் சிஎஸ்கே விளையாடி உள்ளது. அதில் 12 சீசன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது, 10 முறை இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்று 5 முறை கோப்பையை வென்றிருக்கிறது.   


மேலும் படிக்க | ஆக்ரோஷம் காட்டிய கேகேஆர் பௌலர்... அதிர்ச்சி கொடுத்த ஐபிஎல் நிர்வாகம் - என்னாச்சு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ