எம்.எஸ்.டோனி: ஒரு சொல்லப்படாத கதை என்ற பெயரில் கேப்டன் டோனியின் வாழ்க்கை வரலாற்றை குறித்து திரைப்படம் வருகிற 30ம் தேதி நாடு முழுவதும் வெளியாகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படத்தை குறித்தும், டோனியை தாக்கும் விதமாகவும் கருத்து கூறியுள்ளார். 


டுவிட்டரில் கூறியதாவது:-


வாழக்கை வரலாற்றை சினிமா படமாக எடுக்க கூடிய தகுதி கிரிக்கெட் வீரர்களுக்கு இல்லை என நான் நம்புகிறேன். நாட்டில் பல நல்லறம் செய்யும் மக்கள் நிறைய உள்ளனர். அவர்கள் குறித்து வரலாற்று திரைப்படம் தயாரிக்கப்பட வேண்டு. 


 



 


உரி தீவிரவாதிகள் தாக்குதலில் உயிர் இழந்த 17 வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை விட எந்த கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாக்கும் தகுதி உள்ளது. 


 



 


ஒரு இளைஞன் தன் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்ய இந்த 17 வீரர்களின் உயிர்த்தியாகத்தை விட உத்வேகமான செயல் வேறு ஒன்று இல்லை என அவர் கூறியுள்ளார்.