டோனி ஆதார் கார்டு லீக்: மனைவி ஷாக்சி கோபம்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் ஆதார் கார்டு விவரங்கள் லீக் ஆனதால் அவரது மனைவி ஷாக்சி பொங்கியெழுந்துள்ளார்.
டோனியின் ஆதார் கார்டு விண்ணப்பம் உட்பட அனைத்து விவரங்களையும், மத்திய அரசால் ஆதார் கார்டு வழங்க உரிமம் பெற்ற தனியார் நிறுவனம், தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது.
இதைக்கண்ட டோயின் மனைவி ஷாக்சி மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரஷாத்திற்கு டிவிட்டர் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதைப்பார்த்த பிரஷாத் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளித்த ஷாக்சி, தனிப்பட்ட விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்கள், மற்றும் ஆதார் விவரங்கள் பகிரப்பட்டுள்ளது. அதனால் தான் கேள்வி கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது என தெரிவித்துள்ளார்.