டெல்லியின் பிளானை தூள் தூளாக்கிய மும்பை இந்தியன்ஸ்! இதுதான் சம்பவம்
கேம்ரூன் கிரீனை ஏலத்தில் எடுக்க நினைத்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பிளானில் மண்ணை வாரி போட்டிருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.
ஐபிஎல் ஏலம் 2023
அடுத்தாண்டு பிரம்மாண்டமாக தொடங்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் கொச்சியில் பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த சுட்டிக் குழந்தை சாம் கரண் மிகப்பெரிய ஜாக்பாட்டில் பஞ்சாப் அணிக்கு சென்றிருக்கிறார். ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத தொகையான 18.50 கோடிக்கு அவர் ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறார். அவரைத் தொடர்ந்து கேம்ரூன் கிரீன் 17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறார்.
மேலும் படிக்க | 17.50 கோடிகளை கொட்டி மும்பை இந்தியன்ஸ் தூக்கிய கேம்ரூன் கிரீன்! யார் இவர்?
மும்பையின் பிளான்
பொல்லார்டு ஓய்வு பெற்றுவிட்டதால் அவருடைய இடத்தை நிரப்புவதற்கு சரியான ஆளை தேடிக் கொண்டிருந்தது. இரண்டு மூன்று ஆண்டுகளாகவே கேம்ரூன் கிரீன் ஆட்டத்தை கவனித்து வந்த மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த ஏலத்தில் அவருடைய பெயர் அழைக்கப்பட்டது முதல் விடாப்பிடியாக பணத்தை கொட்டி ஏலத்தில் தட்டி தூக்கியது. கேம்ரூன் கிரீனை எடுக்க ஆர்சிபி, டெல்லி உள்ளிட்ட அணிகள் கடும் போட்டி போட்டன. இருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் வெற்றி பெற்றது.
டெல்லி பிளான் வீண்
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார். அவரது தலைமையின் கீழ் இருக்கும் டெல்லி அணியும், கேம்ரூன் கிரீன்-ஐ ஏலத்தில் எடுக்க முட்டி மோதியது. அவர்கள் கையில் பணம் மீதம் இருந்தபோதும் தாங்கள் எதிர்பார்த்த தொகைக்கு மேல் ஏலத்தில் சென்றுவிட்டதால் கேம்ரூன் கிரீனை டெல்லி கேப்பிட்டல்ஸ் எடுக்கவில்லை. இதற்கு காரணம் மும்பை அணி விடாப்பிடியாக கேம்ரூன் கிரீனின் ஏல தொகையை ஏற்றிக் கொண்டே சென்றது. இதனால் கடுப்பான டெல்லி, கேம்ரூன் கிரீனை எடுக்கும் முடிவில் இருந்து பின்வாங்கியது.
மேலும் படிக்க | IPL 2023 Auction:'கப்பு' எங்களுக்கு தான்.. ஏலத்தை நிறைவு செய்த குஜராத் டைட்டன்ஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ