IPL 2019: இரண்டாவது வெற்றியை பதிவு செய்யுமா பெங்களூரு அணி?
IPL 2019 தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் இன்று மோதுகின்றன.
07:43 PM 15-04-2019
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு!
IPL 2019 தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் இன்று மோதுகின்றன.
மும்பை வான்கோட் மைதானத்தில் நடைப்பெறும் இப்போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலன்ஜர்ஸ் பெங்களூரு அணியும், ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
7 போட்டிகள் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றிப் பெற்றுள்ள பெங்களூரு அணிக்கு இன்றைய போட்டியின் வெற்றி மிகமுக்கிய ஒன்றாகும். 8 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கும் மும்பை அணிக்கு இன்றைய வெற்றி தகுதி போட்டிக்கு தங்கள் இருப்பை உறுதி செய்ய தேவையான முக்கிய போட்டியாகும்.
2016-ஆம் ஆண்டு துவங்கி இதுவரை இரு அணிகளும் 7 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் 6 போட்டிகளில் மும்பை அணியே வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக 3 வெற்றி வான்கோட் மைதானத்தில் பெற்ற வெற்றிகளாகும்.
கடந்த 13 இன்னிங்ஸுகளாக ரோகித் ஷர்மா 50 ரன்களை எட்டவில்லை, அரை சதம் அடிக்காமல் 13 இன்னிங்ஸ் விளையாடியுள்ள ரோகித்துள்ளு இது ஒரு நீண்டதொரு இடைவெளி ஆகும்.
மும்பை அணி பந்துவீச்சாளர் ஜாஸ்பிரீட் பூம்ரா மற்ற அணிகளுக்கு எதிராக விக்கெட்டுகளை குவித்ததை காட்டிலும் பெங்களூரு அணிக்கு எதிராகவே அதிகமான விக்கெட் குவித்துள்ளார். அதவாவது பெங்களூரு அணிக்கு எதிராக மட்டும் அவர் 16 விக்கெட்டுகளை குவித்துள்ளார். அதிலும் விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸை தலா இரண்டு முறை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.