டெல்லியை வீழ்த்தி ஆர்சிபியை காப்பாற்றியது மும்பை
இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் வீழ்த்தியது.
ஐபிஎல் 2022ன் இன்றைய லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணிகளும் மோதின. இந்தப் போட்டியில் தோற்றால் தொடரிலிருந்து வெளியேற வேண்டும் என்ற நிலையில் டெல்லியும், ஆறுதல் வெற்றிக்காக மும்பை இந்தியன்ஸ் அணியும் களமிறங்கின.
டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணிக்கு டேவிட் வார்னரும், ப்ரித்வி ஷாவும் களமிறங்கினர். நீண்ட நேரம் நிலைத்து நிற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த ஜோடி மூன்றாவது ஓவரிலேயே பிரிந்தது. டேவிட் வார்னர் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க அதற்கு அடுத்து களமிறங்கிய மிட்செல் மார்ஷும் ரன் எடுக்காமல் வெளியேறினார்.
அதன் பிறகு சிறிது நேரம் நிலைத்து நின்ற ப்ரித்வி ஷாவும் 24 ரன்களில் வெளியேற சர்ஃபராஸ் கானுடன் ஜோடி சேர்ந்தார் பண்ட். ஆனால் சர்ஃபராஸ் கானும் விரைவிலேயே வெளியேறியதால் டெல்லி அணி தடுமாற தொடங்கியது.
இந்தச் சமயத்தில் பவெலும், பண்ட்டும் ஜோடி சேர்ந்து டெல்லியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டனர். அதேசமயம், தேவையான நேரத்தில் பவெல் அதிரடி காட்டவும் தவறவில்லை. தொடர்ந்து அதிரடியாக ஆட முயன்ற ரிஷப் பண்ட் 39 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து பாவெலும் 43 ரன்களில் வெளியேற டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை எடுத்தது.
160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணிக்கிஉ இஷான் கிஷனும், ரோஹித் ஷர்மாவும் தொடக்கம் தந்தனர். வலுவான தொடக்கம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சொற்ப ரன்களில் வெளியேறினார். அதனையடுத்து கிஷனுடன் ப்ரிவிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை வெற்றி பெற செய்ய கடுமையாக போராடியது.
நிதானமாகவும் தேவைப்பட்ட நேரத்தில் அதிரடிய்கவும் இந்த ஜோடி விளையாடியது. குல்தீப் வீசிய 10ஆவது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்து ப்ரிவிஸ் அதகளப்படுத்தினார். சிறப்பாக விளையாடிவந்த கிஷன் 48 ரன்களில் ஆட்டமிழந்தார்
அவரைத் தொடர்ந்து மும்பை ரசிகர்களுக்கும், பெங்களூரு ரசிகர்களுக்கும் நம்பிக்கை அளித்துக் கொண்டிருந்த ப்ரிவிஸ் 37 ரன்களில் வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து திலக் வர்மாவும், டிம் டேவிட்டும் இணைந்தனர். இந்த ஜோடி மும்பையை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் முனைப்போடு விளையாடியது. டெல்லியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்ட திலக் வர்மாவும், டேவிட்டும் தேவையான நேரத்தில் பவுண்டரிகளை விளாசினர். இதனால் ரன்களுக்கும் பந்துகளுக்கும் உள்ள வித்தியாசம் குறைந்தது.
மேலும் படிக்க | இங்கிலாந்துக்கு மேலும் ஒரு அடி! மீண்டும் ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகல்!
இந்த சூழலில் டிம் டேவிட் 11 பந்துகளில் 34 ரன்களுக்கும், திலக் வர்மா 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதன் பிறகு களமிறங்கிய ரமன்தீப் சிங்கும் சிறப்பாக ஆட டெல்லி அணியை மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது. அதேசமயம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR