வனுவாட்டு ஆண்கள் தேசிய அணியின் கேப்டனாக, ஆண்ட்ரூ மன்சாலேவிடம் இருந்து நலின் நிபிகோ பொறுப்பேற்பார் என்று நவம்பர் 11 திங்கள் அன்று நாட்டின் கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

14 டி20 போட்டிகளில் தனது அணியை வழிநடத்திய மன்சலே, கடந்த வாரம் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்; இருப்பினும், ஆல்ரவுண்டர் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட விரும்பினார். 31 வயதான அவர் வனுவாட்டு கேப்டனாக இருந்த காலத்தை பிரதிபலித்தார், மேலும் ஒரு இளைஞரிடம் பொறுப்பை ஒப்படைக்க இது சரியான தருணம் என்று உணர்ந்தார்.



இதுகுறித்து மன்சாலே தெரிவிக்கையில்., "வனுவாட்டு தேசிய ஆண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்க முடிந்தது எனக்கு கிடைத்த மரியாதை, எனது ஆட்டங்களில் நான் ஒரு நல்ல ஓட்டத்தை பெற்றிருக்கிறேன் என்று நினைக்கிறேன், ஆனால் எனது கடமை முடியும் காலம் வந்துவிட்டது, இளையவர்களில் ஒருவருக்கு கேப்டன் பதவியை ஒப்படைக்க வேண்டிய நேரம் இது என்றும் நான் உணர்கிறேன். புதிய யோசனைகள் மற்றும் வனுவாட்டு கிரிக்கெட்டை தொடர்ந்து எடுத்துச் செல்லும் திறன் கொண்ட தோழர்களுக்கு வாய்ப்பு வழங்க விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.



மன்சாலையின் முடிவை ஏற்ற வனுவாட்டு கிரிக்கெட் அசோசியேசன் தலைவரான மார்க் ஸ்டாஃபோர்டு மன்சாலையும் வாழ்த்தினார்: இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில்., "ஆண்ட்ரூ மன்சாலே வனுவாட்டு தேசிய கிரிக்கெட் அணிக்கு அளித்த அற்புதமான பங்களிப்பை ஒப்புக் கொள்ள விரும்புகிறேன். உலக கிரிக்கெட் வறலாற்றில் மிக நீண்ட காலம் பணியாற்றிய கேப்டன்களில் ஆண்ட்ரூவும் ஒருவர் அவர் மரியாதையுடனும் தனித்துவத்துடனும் பணியாற்றியுள்ளார்." என குறிப்பிட்டுள்ளார்.


மன்சாலே ராஜினாமாவை அடுத்து அணிக்கு 24 வயதான நிபிகோ புதிய கேப்டனாக பதவியேற்றுள்ளார். தனது அணிக்காக இதுவரை அவர் 14 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார், மேலும் அவரது பெயர் பட்டியலுடன் 312 ரன்களும் 24 விக்கெட்டுகளும் உள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜூலை மாதம், பப்புவா நியூ கினியாவுக்கு எதிராக தனது தொழில் வாழ்க்கையின் சிறந்த புள்ளிவிவரங்களை (5/19) என்ற கணக்கை அவர் பதிவு செய்தார்.



வனுவாட்டு சமீபத்தில் ICC CWC Challenge League Group A-யில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.