ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் இன்று (அக். 16) தொடங்கியது. இந்த சுற்றில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் 'ஏ' பிரிவிலும், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, மேற்கு இந்திய தீவுகள், ஜிம்பாப்வே அணிகள் 'பி' பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், தகுதிச்சுற்றின் முதல் போட்டியில், சமீபத்தில் பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட அணிகளை வீழ்த்தி ஆசிய கோப்பை தொடரை வென்ற இலங்கை அணியும், கத்துக்குட்டி அணியான நமீபியாவும் இன்று மோதின. 


ஆஸ்திரேலியாவின் கீலாங் நகரின் சைமண்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில், இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடி நமீபியா அணி 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்களை எடுத்தது.  



மேலும் படிக்க | பிசிசிஐ-ல் இருந்து வெளியேறிய பிறகு சவுரவ் கங்குலி எடுத்த முக்கிய முடிவு!


நமீபியாவின் தொடக்க வீரர்கள் சொதப்பினாலும், மிடில் ஆர்டர் பேட்டர்களான ஜான் ஃப்ரைலின்க், ஸ்மிட் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் கௌரவமான ஸ்கோரை அந்த அணி எட்டியது. ஜான் 44 (28) ரன்களையும், ஸ்மிட் 31 (16) ரன்களையும் எடுத்தனர். இலங்கை பந்துவீச்சில் மதுஷன் 2 விக்கெட்டுகளையும், தீக்ஷனா, சமீரா, கருணாரத்னே, ஹசரங்கா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 


தொடர்ந்து பேட்டிங் ஆடிய இலங்கை அணிக்கு, நமீபியா பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சி அளித்தனர். பவர்பிளே ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நமீபியா அணி, இலங்கை பேட்டர்களை ரன் குவிப்பதில் இருந்து வெகுவாக கட்டுப்படுத்தினர். டேவிட் வைஸ், பென் ஷிகோங்கோ, ஜான் ஃப்ரைலின்க், பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ் ஆகிய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை கைப்பற்றினர். 


இதனால், இலங்கை அணி 19 ஓவர்களில் 108 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அந்த அணியை பொறுத்தவரை கேப்டன் ஷனகா 29 (23) ரன்களையும், பனுகா ராஜபக்ச 20 (21) ரன்களையும் எடுத்தனர். நமீபியா பந்துவீச்சில் டேவிட் வைஸ், பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ், பென் ஷிகோங்கோ, ஜான் ஃப்ரைலின்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பேட்டிங்கில் 44 ரன்களையும், பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளையும் எடுத்த ஜான் ஃப்ரைலின்க் ஆட்ட நாயகனாக தேர்வானார். 



இந்த வெற்றி மூலம், 'ஏ' பிரிவில் 2 புள்ளிகளை பெற்று நமீபியா முன்னிலையில் உள்ளது. நமீபியா தனது அடுத்த போட்டியில் நெதர்லாந்து அணியுடன் விளையாடுகிறது. தோல்வியைடந்த இலங்கை அணி, அடுத்து ஐக்கிய அரபு அமீரகம் அணியுடன் மோத உள்ளது. இவ்விரு போட்டிகளுக்கும் நாளை மறுதினம் (அக். 18) நடைபெறுகிறது. 


குருப் 'ஏ' பிரிவின் மற்றொரு போட்டியில், ஐக்கிய அரபு அமீரகம் - நெதர்லாந்து அணிகள் இன்று மதியம் 1.30 மணிக்கு (இந்திய நேரப்படி) அதே சைமண்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.   


மேலும் படிக்க | இன்ஸ்டாகிராமில் கோடிகளை அள்ளும் விராட் கோலி; முன்னணி பிரபலங்களை பின்னுக்கு தள்ளினார்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ