கோவை நேரு விளையாட்டு அரங்கில் அகில இந்திய தடகளப்போட்டி தொடங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அகில இந்திய தடகளப்போட்டி கோவை நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இந்த போட்டி வருகிற 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தடகளப்போட்டி பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டியாக இருக்கும். இதில் நாடு முழுவதும் உள்ள 119 பல்கலைக் கழகங்களில் படிக்கும் 2,085 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன..


இதன் தொடக்க விழா நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் தலைமை தாங்கினார். விளையாட்டு மன்ற தலைவர் எஸ்.செல்லதுரை வரவேற்று பேசினார். கோவை மாவட்ட கலெக்டர் டி.என்.ஹரிகரன், எம்.எல்.ஏக்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன் மற்றும் விளையாட்டு மன்ற செயலாளர் எஸ்.சுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு, மாணவ- மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் ஒலிம்பிக் தீபம் ஏற்றி, போட்டிகளை தொடங்கி வைத்தார்.