அமெரிக்க கூடைப்பந்து ஜாம்பவான் கோபி பிரயன்ட் தனது 13 வயது மகள் கியானாவுடன் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தி கார்டியன் அறிக்கையின்படி, அமெரிக்க கூடைப்பந்து ஜாம்பவான் கோபி பிரயன்ட் தனது 13 வயது மகள் கியானாவுடன் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தாக  வெளியாகி உள்ளது. தலைசிறந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் கோபி பீன் பிரயன்ட். 


இவர் சென்ற ஹெலிகாப்டரில் கோபி பிரயன்ட் மற்றும் அவர் மகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். பனிமூட்டமான வானிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திலிருந்து வடமேற்கே 30 மைல் தொலைவில் உள்ள கலபாசாஸ் அருகே இந்த விபத்துக்குள்ளானது என்றும் தி கார்டியன் தகவல் வெளியிட்டது. 


கோபி பீன் பிரயன்ட் அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் லாசு ஏஞ்சல்சு லேகர்சு என்ற அணியில் 20-ஆண்டு காலம் விளையாடினார்.


பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்டு நேரடியாக என்பிஏ சங்கத்தில் இணைந்தார். ஐந்து முறை என்பிஏ வாகையாளராகத் தெரிவு செய்யப்பட்டார். 18 முறை என்பிஏ அனைத்து-நட்சத்திர வீரராகவும் தெரிவானார். உலகின் தலைசிறந்த கூடைப்பந்தாட்ட வீரர்களில் ஒருவராகக் கணிக்கப்பட்டவர்.


இந்நிலையில் நேற்று (ஜனவரி 26 ஆம் தேதி) இவர் தனது 41-வது அகவையில் கலிபோர்னியாவில் இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தில் உயிரிழந்தார். இவருடன் சென்ற அவரது 13-அகவை மகள் கியான்னா மற்றும் ஏழு பேரும் இவ்விபத்தில் உயிரிழந்தனர்.