Silver for Neeraj Chopra: உலக தடகளப்போட்டியில் நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளிப் பதக்கம்
Silver for Neeraj Chopra: சரித்திரம் படைத்த நீரஜ் சோப்ரா! இந்தியாவின் பதக்கக் கனவை நிறைவேற்றினார் நீரஜ் சோப்ரா... உலக தடகளப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார்
Champion Neeraj Chopra: இந்தியாவின் பதக்கக் கனவை நிறைவேற்றி சரித்திரம் படைத்தார் நீரஜ் சோப்ரா... உலக தடகளப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.13 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். உலக தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார்.
நீரஜ் சோப்ரா உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் மற்றும் 2003 இல் அஞ்சு பாபி ஜார்ஜுக்குப் பிறகு இரண்டாவது பதக்கம் வென்றவர் என்று பெருமை பெற்றுள்ளார். ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
மேலும் படிக்க | 94 வயது பெண்மணி உலக தடகள போட்டியில் தங்கம் வென்ற பெருமைமிகு தருணம்
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா 88.13 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் போட்டியில் பங்கெடுத்தபோது, ஐந்தாவது முயற்சி ஒரு தவறு. செய்தபோது அனைவரின் மனதிலும் அச்சம் எழுந்தது. இரண்டாவது சுற்றில், 82.39 மீ தொலைவும், 3வது சுற்றில் 86.37 மீ தூரமும், 4வதில் 88.13 மீ தொலைவும் ஈட்டியை எறிந்தார்.
நீரஜ் சோப்ரா நான்காவது முயற்சியில் 88.13 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்க நிலைக்கு முன்னேறினார். கடைசி மூன்று த்ரோக்கள் முதல் எட்டு தடகள வீரர்களுடன் தொடங்குகியது, இந்தியரான ரோஹித் யாதவ் அறிமுகப் போட்டியில் 10வது இடத்தைப் பிடித்ததால்போட்டியிலிருந்து வெளியேறினார்.
நீரஜ் சோப்ராவுக்கு பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்த நீரஜ் சோப்ராவுக்கு பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா வாழ்த்து தெரிவித்து டிவிட்டர் பதிவு வெளியிட்டிருக்கிறார்.
உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது, டோக்கியோ ஒலிம்பிக்கிற்குப் பிறகு கொண்டாடுவதற்கு இந்தியாவுக்கு இன்னொரு காரணத்தைக் கொடுத்துள்ளீர்கள் என்று நட்டா பாராட்டியுள்ளார்.
ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் இறுதிப் போட்டியில் இந்தியாவின் எல்தோஸ் பால் 16.37, 16.79, 13.86 என்ற வினாடிகளில் 9வது இடத்தைப் பிடித்தார்.
மேலும் படிக்க | பெருமைக்காக அணியில் இருக்கிறாரா விராட் கோலி? இளம் வீரர்களின் சோகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR