ஒலிம்பிக் தங்க மகன் நீரஜ் சோப்ராவின் அடுத்த இன்னிங்ஸ் தொடங்கியது

வரலாற்று சாதனை படைத்த டோக்கியோ ஒலிம்பிக் 2020 சாம்பியன் நீரஜ் சோப்ரா, இரண்டு மாத விடுமுறைக்குப் பிறகு பயிற்சிக்கு திரும்பினார் 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 21, 2021, 02:20 PM IST
  • டோக்கியோ ஒலிம்பிக் 2020 சாம்பியன் நீரஜ் சோப்ரா
  • இரண்டு மாத விடுமுறைக்குப் பிறகு சோப்ரா பயிற்சிக்கு திரும்பினார்
  • உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்வதே அடுத்த இலக்கு
ஒலிம்பிக் தங்க மகன் நீரஜ் சோப்ராவின் அடுத்த இன்னிங்ஸ் தொடங்கியது title=

புதுடெல்லி: டோக்கியோவில் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஒலிம்பிக் 2020 போட்டிகளில் கலந்துக் கொண்டு தங்கம் வென்ற இரண்டு மாதங்களுக்கு பிறகு நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா என்ஐஎஸ்-பாட்டியாலாவில் உள்ள பயிற்சி முகாமுக்கு திரும்பினார். டோக்யோவில் கோடைக்கால விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஈட்டி இறுதிப் போட்டியில் சாதனையை படைத்த பிறகு, இரண்டு மாதங்கள் விடுமுறையை அனுபவித்த சோப்ரா பயிற்சிக்கு திரும்பினார். 

23 வயதான சோப்ரா, தடகளத்தில் இரண்டாவது இந்திய தனிநபர் ஒலிம்பிக் தங்க வெற்றியாளராக தடம் பதித்தார். ஆகஸ்ட் 7ம் தேதியை இந்திய ஒலிம்பிக் விளையாட்டில் மறக்க முடியாத  மாற்றினார் சோப்ரா.  

“முன்பு இருந்த அதே உத்வேகத்துடனும் ஆர்வத்துடனும் இந்த வாரம் பயிற்சிக்கு திரும்பியிருக்கிறேன். ஒலிம்பிக் வெற்றிக்கு தொடக்கத்தைக் கொடுத்த நல்ல இடம்! எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி” என தனது பயிற்சி அமர்வின் இரண்டு படங்களுடன் ட்வீட் செய்தார் நீரஜ் சோப்ரா

சுதந்திர இந்தியாவிற்கு விளையாட்டுத் துறையின் தடகளப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுக் கொடுத்த தலைமகன் என்ற பெருமையை பெற்றார் நீரஜ் சோப்ரா. விளையாட்டு வீரர் ஆனார். அரை நூற்றாண்டுகளாக இந்திய தடகளப் பிரிவில் தங்கப் பதக்கம் பெறுவதற்காக நீண்ட காலம் காத்திருந்தது. மறைந்த ஸ்ப்ரிண்டர் மில்கா சிங் மற்றும் பிடி உஷா ஆகியோர் மைக்ரோ விநாடியில் தடகளப் பதக்கத்தை இழந்தனர்.

87.58 மீ எறிதலுடன் ஒலிம்பிக் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடக்கும் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்வதே தனது அடுத்த இலக்கு என்று உறுதியுடன் இருக்கிறார்.

neeraj

2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்காக ஜெர்மன் பயோ-மெக்கானிக்ஸ் நிபுணர் கிளாஸ் பார்டோனியெட்ஸுடன் தொடர்ந்து பயிற்சி பெற விரும்புவதாகவும் அவர் அண்மையில் தனது விருப்பத்தைக் கூறினார்.

ஆகஸ்ட் மாதம் டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜின் வரலாற்று தங்கப் பதக்கம் விளையாட்டுத் துறையில் எழுச்சியைத் தூண்டியது என்றால் அது மிகையாகாது.

Also Read | Olympic தங்க மகன் நீரஜ் சோப்ராவின் ஸ்கூபா டைவிங் வீடியோ வைரல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News