இந்திய மண்ணில் ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை வெல்லாத நியூஸிலாந்து!
இதுவரை இந்திய மண்ணில் நியூஸிலாந்து டெஸ்ட் தொடரை வென்றது இல்லை என்ற நிலையை மாற்றி அமைக்க விளையாடி வருகிறது நியூஸிலாந்து.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் இன்று கான்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கேப்டன் கோலிக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரஹானே இந்திய அணியின் கேப்டனாக இந்த போட்டியில் களம்இறங்குகிறார். மேலும், ரோஹித், ராகுல், பந்த், பும்ராஹ் போன்ற சீனியர் வீரர்களுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. விராட்கோலி மட்டும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ளஉள்ளார். இளம் இந்திய அணி இந்த தொடரில் விளையாட உள்ளது.
ALSO READ சூர்யகுமார் யாதவை No.3 ல் இறக்க கூடாது - முன்னாள் இந்திய வீரர்!
இந்நிலையில் இதுவரை இந்திய மண்ணில் நியூஸிலாந்து டெஸ்ட் தொடரை வென்றது இல்லை என்ற நிலையை மாற்றி அமைக்க விளையாடி வருகிறது. 1955 முதல் கடைசியாக நியூஸிலாந்து அணி இந்தியாவில் விளையாடிய 2016/17 டெஸ்ட் தொடர்கள் வரை இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. நியூஸிலாந்து அணி ஒரு முறை கூட தொடரை வென்றது இல்லை. சில தொடர்கள் டிராவில் முடிந்துள்ளது. எனவே இந்த டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் நியூஸிலாந்து அணி உள்ளது.
இதே போல் இந்திய அணி நியூஸிலாந்தில் விளையாடி டெஸ்ட் தொடர்களில் அதிகமாக தோல்வி அடைந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஷ்ரேயஸ் அய்யர் இன்றைய போட்டியில் களம் இறங்குகிறார்.
இந்திய அணி: அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி, விருத்திமான் சாஹா (வி.கே), அக்சர் படேல், ஆர்.அஷ்வின், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, கே.எஸ்.பரத் (WK) , ரவீந்திர ஜடேஜா.
ALSO READ IPL 2022: தல தோனி இன்னும் 3 சீசன்களுக்கு CSKவுக்கு தான்! ஒப்பந்தம் முடிவானது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR