T20 World Cup: டி20 உலகக் கோப்பைக்கான அணியை அறிவித்தது நியூசிலாந்து
T20 World Cup 2021: அக்டோபர் மாதம் தொடங்க உள்ள T20 2021 உலக கோப்பைக்கான அணியை அறிவித்தது நியூசிலாந்து கிரிக்கெட் அணி.
T20 World Cup 2021: டி20 உலகக் கோப்பை 2007ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை போட்டி அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 12 அணிகள் பங்குபெறும் இந்த போட்டியில், ஐசிசி தர வரிசையில் உள்ள டாப் 8 அணிகள் நேரடியாக உள்ளே செல்கின்றன. மீதமுள்ள 4 இடங்களுக்கு 8 அணிகள் போட்டி போடுகின்றன. முதல் ரவுண்டில் தேர்ந்தெடுக்கப்படும் நான்கு அணிகளும் சூப்பர் 12 குழுவில் இடம்பெறும். ஐசிசி (International Cricket Council) தரவரிசையில் மிகவும் பின்தங்கி உள்ளதால் ஸ்ரீலங்கா, பங்களாதேஷ் போன்ற அணிகளும் முதல் ரவுண்டில் வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் 12 குழுவில் இடம் பெற முடியும்.
சூப்பர் 12 அணிகள் குரூப் ஏ (Group A), குரூப் பி (Group B) என்று இரண்டாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் 6 அணிகள் இடம்பெறுகின்றன. Group A பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் Group B பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. முதல் ரவுண்டில் தேர்ந்தெடுக்கப்படும் நான்கு அணிகள் "குரூப் ஏ, குரூப் பி" பிரிவுகளில் இடம் பெறும்.
ஒரே பிரிவில் இந்திய (India)அணியும், பாகிஸ்தான் (Pakistan) அணியும் இடம் பெற்றிப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் பரம எதிரிகளான இரண்டு அணிகள் மோதும் ஆட்டத்தை பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
உலக கோப்பை போட்டிகள் தொடங்க இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், தற்போது தனது அணியை நியூசிலாந்து (New Zealand’s squad)அறிவித்துள்ளது.
ALSO READ | டி 20 உலகக் கோப்பை 2021 குரூப் அறிவிப்பு: ஒரே பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்
கேன் வில்லியம்சன் (Kane Williamson) தலைமையில் டூட் ஆஷ்லி, டிரென்ட் போல்ட், மார்க் ஜாப்மன், கான்வே, பெர்குசன், மார்டின் குப்டில், ஜேமிசன், மிட்செல், ஜிம்மி நீசம், பிலிப்ஸ், சான்ட்னர், டிம் செய்ஃபர்ட், சொதி, டிம் சவுதி, அடம் மில்னே என மொத்தம் 16 வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பால் டி20 உலக கோப்பை இப்பொழுது இருந்தே சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
தகுதிச்சுற்று போட்டியில் பங்கேற்கும் அணிகள்:
குழு ஏ: இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் நமீபியா
குழு பி: பங்களாதேஷ், ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா மற்றும் ஓமான்
சூப்பர் 12 அணிகளின் விவரங்கள்:
குழு 1: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், ஏ 1 மற்றும் பி 2.
குழு 2: இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஏ 2 மற்றும் பி 1
ஐ.சி.சி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ( ICC Men’s T20 World Cup 2021) துபாய் சர்வதேச மைதானம், அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானம், ஷார்ஜா மைதானம் மற்றும் ஓமான் கிரிக்கெட் அகாடமி மைதானங்களில் நடைபெறுகின்றன. இந்த போட்டிகள் அக்டோபர் 17ம் தேதி முதல் நவம்பர் 14 வரை போட்டிகள் நடைபெறும். ஏற்கனவே முடிவு செய்தது போல இந்த போட்டிகளை பி.சி.சி.ஐ (BCCI) நடத்தும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | ICC on T20 World Cup 2021: அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை UAE-Omanல் நடைபெறும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR