ICC on T20 World Cup 2021: அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை UAE-Omanல் நடைபெறும்

டி-20 உலகக்கோப்பை போட்டிகள் அக்டோபர் 17ம் தேதி முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும். ஏற்கனவே முடிவு செய்தது போல இந்த போட்டிகளை BCCI நடத்தும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 29, 2021, 04:00 PM IST
  • அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை T20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும்
  • யு.ஏ.இ மற்றும் ஓமனில் போட்டிகள் நடைபெறும்
  • பிசிசிஐ போட்டிகளை நடத்தும்
ICC on T20 World Cup 2021: அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை UAE-Omanல் நடைபெறும் title=

புதுடெல்லி: ICC ஆடவர் டி 20 உலகக் கோப்பை 2021 போட்டிகள் நடைபெறும் இடம் ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் ஓமானுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

அக்டோபர் 17ம் தேதி முதல் நவம்பர் 14 வரை போட்டிகள் நடைபெறும். ஏற்கனவே முடிவு செய்தது போல இந்த போட்டிகளை பி.சி.சி.ஐ (BCCI) நடத்தும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

16 நாடுகளின் கலந்துக் கொள்ளும் போட்டி டி 20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டதாக நேற்று பிசிசிஐ அறிவித்தது.

கோவிட் -19 தொற்றுநோயைத் தொடர்ந்து போட்டியை நடத்த பிசிசிஐயின் தயார்நிலை தொடர்பான தகவல்களை அறிந்த பிறகுதான் போட்டி தொடர்பான விவரங்கள் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. நேற்று இந்திய கிரிக்கெட் கவுன்சில் தனது முடிவை அறிவித்தது.

அதையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அதிகாரபூர்வமாக இட மாற்றம் மற்றும் போட்டி தேதிகளை அறிவித்துள்ளது. ஏற்கனவே முடிவு செய்தது போல இந்த போட்டிகளை பி.சி.சி.ஐ (BCCI) நடத்தும் எனவும் ஐ.சி.சி அறிவித்துள்ளது.

Also Read | T20 உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் இருந்து UAEக்கு மாறியது - BCCI

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News