நியூசிலாந்து வீரர்கள் பந்துவீச்சில் சரிந்தது இந்திய கிரிக்கெட் அணி...
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
நியூசிலாந்தில் சுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரில் இந்தியா 5-0 என்ற புள்ளி கணக்கில் நியூசிலாந்து அணியை வொயிட்வாஸ் செய்தது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஒருநாள் தொடரினை 3-0 என்ற புள்ளி கணக்கில் நியூசிலாந்து அணி வென்றது. இதனைத்தொடர்ந்து நடைப்பெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட் சர்ச் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்து விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா கிரிக்கெட் அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர். இந்நிலையில் இந்தியா 63 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 242 ரன்கள் மட்டுமே குவித்தது.
அணியில் அதிகபட்சமாக ஹனுமான் விகாரி 55(70) ரன்கள் குவித்தார். பிரித்திவி ஷா 54(64) மற்றும் புஜாரா 54(140) ரன்கள் குவித்தனர். நியூசிலாந்து அணியின் கேல் ஜெய்ம்சன் 5 விக்கெட் குவித்தார்.
இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் டோம் லாத்தம் 27*(65) மற்றும் மோம் புலென்டெல் 29*(73) முதல் நாள் ஆட்ட நேர முடியும் வரையிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இதன் மூலம் நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்று 63 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் இந்தியா அணியை விட 179 ரன்கள் நியூசிலாந்து அணி பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.