Video: 6 பந்தில் 6 சிக்ஸ்ர்... ஆனால் இந்த முறை யுவராஜ் இல்லை...
நியூசிலாந்தின் உள்நாட்டு டி20 போட்டியான சூப்பர் ஸ்மாஷ்-ன் ஒரு போட்டியில் ‘ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்களை’ விளாசி நியூசிலாந்தின் லியோ கார்ட்டர் சாதனை படைத்துள்ளார்!
நியூசிலாந்தின் உள்நாட்டு டி20 போட்டியான சூப்பர் ஸ்மாஷ்-ன் ஒரு போட்டியில் ‘ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்களை’ விளாசி நியூசிலாந்தின் லியோ கார்ட்டர் சாதனை படைத்துள்ளார்!
மேலும் இதன் மூலம் அவர் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற பொருமையினையும் அவர் பெற்றுள்ளார். கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவலில் வடக்கு நைட்ஸ் அணியை எதிர்த்து கேன்டர்பரி கிங்ஸ் வென்றபோது கார்ட்டர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
கேட்டர்பரியின் சேஸின் 16-வது ஓவரில் 25 வயதான இடது கை பேட்ஸ்மேன் இடது கை சுழற்பந்து வீச்சாளர் அன்டன் டெவ்சிச்சின் ஆறு பந்துகளை எதிர்கொண்ட போது ஆறு தொடர் சிக்ஸர்களை அடித்துள்ளார். கார்டரின் அதிர்ச்சியூட்டும் ஆட்டம் வெறும் 29 பந்துகளில் 70 ரன்கள் குவிக்க வழி செய்தது. மேலும் கேன்டர்பரியின் அதிரடி ஆட்டம் அவரது அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்தது.
கார்ட்டர் 12 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து கொண்டிருந்தார், கேட்டர்பரியின் அணிக்கு கடைசி 5 ஓவர்களில் 64 ரன்கள் தேவைப்பட்டன, ஆனால் 16 வது ஓவரில் கார்ட்டர் டெவ்சிச்சின் பந்துவீச்சனை தும்சம் செய்ததால் சமன்பாடு வியத்தகு முறையில் மாறியது.
ஒட்டுமொத்தமாக, கார்ட்டர் உலக கிரிக்கெட்டில் உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டத்தில் என அனைத்து வடிவங்களிலும் இந்த சாதனையை படைத்த ஏழாவது வீரர் எனும் பெருமையினை பெற்றார். இவருக்கு முன் இச்சாதனையினை புரிந்தவர்கள் கேரி சோபர்ஸ், சாஸ்திரி, ஹெர்ஷல் கிப்ஸ், யுவராஜ், வொர்செஸ்டர்ஷையரின் ரோஸ் வைட்லி மற்றும் ஆப்கானிஸ்தானின் ஹஸ்ரத்துல்லா ஜசாய் ஆகியோர் என அடையாளம் காணப்படுகின்றனர்.
அதேவேளையில் உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த நான்காவது பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் கார்ட்டர் பெற்றுள்ளார். டி20 போட்டிகளில் சாதனை படைத்த மற்ற பேட்ஸ்மேன்களில் இந்தியாவின் யுவராஜ் (2007), வைட்லி (2017) மற்றும் ஜசாய் (2018) ஆகியோர் அடங்குவர்.