INDvsNZ முதல் ஒருநாள் போட்டி: 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 157 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது!
14:13 23-01-2019
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, தற்போது நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இருக்கும் இந்திய அணி, அந்நாட்டு எதிராக ஐந்து ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டியில் பங்கேற்று வருகிறது.
இன்று இந்தியா - நியூசிலாந்து இடையே முதல் ஒருநாள் போட்டி நேப்பியர் மெக்லீன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. மிகவும் எதிர்பார்ப்புக்கு இடையே தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.
ஆரம்பம் முதலே பந்துவீச்சில் அதிரடி காட்டிய இந்திய வீரர்கள் அடுத்தடுத்து நியூசிலாந்து வீரர்களை வெளியேற்றினர். தொடக்க வீரர்களாக களமிறங்கிய குப்டில் 5(9), முன்றோ 8(9) ரன்களில் வெளியேற தொடர்ந்து களமிறங்கிய அணித்தலைவர் கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாடி 64(81) ரன்கள் குவித்தார். எனினும் இவரை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற நியூசிலாந்து அணி ஆட்டத்தின் 38-வது ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே குவித்தது.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட், மொகமது ஷமி 3 விக்கெட், யுவேந்திர சாஹல் 2, கேதர் ஜாதவ் 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க வீரர்களான ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா களம் கண்டனர். ரோஹித் சர்மா 11(24) ரங்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் ஷிகர் தவானுடன் இணைந்து இந்திய கேப்டன் விராட் கோலி ஆடினார். இருவரும் நிதானமாக வெற்றியை நோக்கி இந்திய அணியை அழைத்து சென்றனர். இதற்கிடையில் ஷிகர் தவான் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
இந்திய கேப்டன் விராட் கோலி 45(59) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் அம்பத்தி ராயுடு மற்றும் ஷிகர் தவான் சேர்ந்து ஆடினர். 34.5 ஓவரில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து வெற்றியை பதிவு செய்தது. ஷிகர் தவான்* 75(103); அம்பதி ராயுடு* 12(22) ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் உள்ளனர்.
இதன்மூலம் இந்திய அணி ஐந்து ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. அடுத்த போட்டி வரும் 26 ஆம் தேதி மவுண்ட் மௌனன்குய் மைதானத்தில் நடைபெற உள்ளது.
13:43 23-01-2019
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி 45(59) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்தியா வெற்றி பெற இன்னும் 20 ரன்கள் தேவை.
13:25 23-01-2019
விராட் கோலி* 37(46) மற்றும் ஷிகர் தவன்* 57(78) ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி 25 ஓவர் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்துள்ளது.
வெற்றி பெற 39 ரன்கள் தேவை.
11:06 AM 23-01-2019
இரவு உணவு இடைவேளை வரை இந்தியா 9 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் குவித்துள்ளது. ரோகித் ஷர்மா 11(22), ஷிகர் தவான் 29(32) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இந்தியா வெற்றிப்பெற 41 ஓவர்களில் 117 ரன்கள் தேவை.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 157 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் மற்றும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா, வரலாற்று வெற்றியை பதிவு செய்து பின்னர் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
நெய்ப்பர் மெலன்பார்க் பார்க் மைதானத்தில் நடைப்பெறும் இன்றைய முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.
ஆரம்பம் முதலே பந்துவீச்சில் அதிரடி காட்டிய இந்திய வீரர்கள் அடுத்தடுத்து நியூசிலாந்து வீரர்களை வெளியேற்றினர். தொடக்க வீரர்களாக களமிறங்கிய குப்டில் 5(9), முன்றோ 8(9) ரன்களில் வெளியேற தொடர்ந்து களமிறங்கிய அணித்தலைவர் கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாடி 64(81) ரன்கள் குவித்தார். எனினும் இவரை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற நியூசிலாந்து அணி ஆட்டத்தின் 38-வது ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே குவித்தது.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட், மொகமது ஷமி 3 விக்கெட், யுவேந்திர சாஹல் 2, கேதர் ஜாதவ் 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கவுள்ளது.