நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை வெலிங்டனில் துவங்கவுள்ளது. அதற்கான பயிற்சியில் இரு அணிகளும் ஈடுபட்டு உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் மற்றும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் முடிந்தது, நாளை முதல் டி20 தொடர் நடைபெற உள்ளது.


5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரை நான்கு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. ஒரே ஒரு போட்டியில் மட்டும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.


நாளை தொடங்க உள்ள டி20 தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு பதிலாக அணியில் சுப்மன் கில் இடம் பெறுவார் எனத்தெரிகிறது. அதேபோல ரிஷப் பண்ட் மற்றும் குல்தீப் யாதவ் அணிக்கு மீண்டும் திரும்ப உள்ளனர்.


ஒருநாள் தொடரை இழந்துள்ளதால் அதற்கு பதிலடி கொடுத்தே தீர வேண்டும் என்ற முனைப்பில் நியூசிலாந்து அணி ஆடக்கூடும். ஆனால் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடர்களை வென்றுள்ளதால், இந்திய அணி உற்சாகத்துடன் விளையாடும். வெற்றியுடன் நாடு திரும்ப வேண்டும் என்ற எண்ணத்தில் இந்திய அணி ஆடும் பட்சத்தில் வெற்றி தூரம் இல்லை.


இந்தியா: ரோஹித் சர்மா, ஷிகர் தவான், சுப்மன் கில், ரிஷப் பண்ட், தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், சாஹல், குல்தீப் யாதவ், கலீல் அஹமது.


நியூசிலாந்து: காலின் முன்ரோ, ஹென்ரி நிக்கோல்ஸ், கேன் வில்லியம்சன், டிம் செய்ஃபெர்ட், ராஸ் டெய்லர், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி, லூகி பெர்குஷான்