11:05 26-01-2019
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாது ஒருநாள் போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்துள்ளது. எம்.எஸ். தோனி* 48(33) மற்றும் கேதர் ஜாதவ்* 22(10) ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து அணி சார்பில் ட்ரென்ட் போல்ட் மற்றும் லோக்கி பெர்குசன் தலா இரண்டு விக்கெட்டை கைப்பற்றினர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நியூசிலாந்து அணி வெற்றி பெற 325 ரன்கள் தேவை. இன்னும் சற்று நேரத்தில் நியூசிலாந்து களம் காண உள்ளது.


 



 



10:48 26-01-2019
45.4 ஓவரில் இந்திய அணி தனது நான்காவது விக்கெட்டை இழந்தது. அம்பதி ராயுடு 47(49) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தற்போது இந்திய அணி 47 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 283ரன்கள் எடுத்துள்ளது. கேதர் ஜாதவ் மற்றும் தோனி விளையாடி வருகின்றனர்.


 



 



10:15 26-01-2019
39.1 ஓவரில் இந்திய அணி தனது மூன்றாவது விக்கெட்டை இழந்தது. விராட் கோலி 43(45) ரன்கள் எடுத்து அவுட் ஆனர். தற்போது இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்துள்ளது.


 




10:11 26-01-2019
38 ஓவருக்கு இந்திய அணி இரண்டு விக்கெட் இழபுக்கு ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி* 40(41) மற்றும் ராயுடு* 29(24) ரன்களுடன் ஆடி வருகின்றனர்.



09:35 26-01-2019
29.3 ஓவரில் இந்திய அணி தனது இரண்டாவது விக்கெட்டை இழந்தது. ரோஹித் ஷர்மா 87(96) ரன்கள் எடுத்து அவுட் ஆனர். தற்போது விராட் கோலி மற்றும் அம்பத்தி ராயுடு விளையாடி வருகின்றனர்.



09:23 26-01-2019
25.2 ஓவரில் இந்திய அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது. ஷிகர் தவன் 66(67) ரன்கள் எடுத்து அவுட் ஆனர். தற்போது ரோஹித் மற்றும் விராட் கோலி விளையாடி 
வருகின்றனர்.


இந்திய அணி 28 ஓவர் முடிவில்ஒரு விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்துள்ளது.



09:03 26-01-2019
அசத்தும் தவான் மற்றும் ரோஹித் இருவரும் அரை சதம். தவான்* 60(58) மற்றும் ரோஹித்* 71(74). இந்திய அணி 22 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 134 ரன்கள் எடுத்துள்ளது.



08:46 26-01-2019
100 ரன்களை கடந்த இந்தியா; இந்திய அணியின் தொடக்க வீரர்கள். தவான்* 46(46 மற்றும் ரோஹித்* 51(62) ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.


இந்திய அணி 18ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்கள் எடுத்துள்ளது.



08:18 26-01-2019
நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள். தவான்* 26(25) மற்றும் ரோஹித்* 33(41) ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.


இந்திய அணி 11ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்துள்ளது.



டாஸ் வென்ற இந்திய அணி முதலி பேட்டிங் செய்து வருகிறது. 



தற்போது நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இருக்கும் இந்திய அணி, அந்நாட்டு எதிராக ஐந்து ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டியில் பங்கேற்று வருகிறது. 


கடந்த 23 ஆம் தேதி இந்தியா - நியூசிலாந்து இடையே முதல் ஒருநாள் போட்டி நேப்பியர் மெக்லீன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. மிகவும் எதிர்பார்ப்புக்கு இடையே தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.


நியூசிலாந்து அணி ஆட்டத்தின் 38-வது ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட், மொகமது ஷமி 3 விக்கெட், யுவேந்திர சாஹல் 2, கேதர் ஜாதவ் 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 34.5 ஓவரில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு டிஏக்எஸ்(DLS) முறைப்படி 156 ரன்கள் எடுத்து வெற்றியை பதிவு செய்தது. 


இந்த வெற்றி இந்திய அணி ஐந்து ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. இந்தநிலையில் இரு அணிகளுக்கிடையில் நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மவுண்ட் மன்கன்யில் மைதானத்தில் நடைபெறுகிறது. 


டாஸ் வென்ற இந்திய அணி முதலி பேட்டிங் செய்கிறது.