ஆக்லாந்து: இன்று ஆக்லாந்தில் நடைபெற உள்ள இரண்டாவது போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய உள்ளது. ஆக்லாந்தில் (Auckland ODI) உள்ள ஈடன் பார்க் ஸ்டேடியத்தில் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இன்று (சனிக்கிழமை) மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறவேண்டிய அழுத்தத்தில் இந்திய அணி (Team India) இருக்கிறது. தனது முதல் ஒருநாள் போட்டியை இழந்த பின்னர் தொடருக்கு திரும்புவதற்கான அழுத்தத்தில் உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



இரு அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த பின்னர், இந்தியாவைப் பொறுத்தவரை, இப்போது தொடரின் மீதமுள்ள இரண்டு போட்டிகளும் "செய் அல்லது செத்து மடி" என்ற நிலை ஆகிவிட்டன. இவற்றில் ஒன்றை இழந்தாலும், இந்திய அணி தொடரை இழப்பார்கள். மறுபுறம், நியூசிலாந்து (New Zealand) தொடரை வெல்ல மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஒன்றை மட்டுமே வெல்ல வேண்டும்.


ஹாமில்டனில் உள்ள செடான் பூங்காவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், இந்தியா 347 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை அடைந்த நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் பந்துவீச்சு பலவீனமாக இருந்தது. குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா அதிக ரன்களை விட்டுக்கொடுத்தனர். மூத்த வீரர் ரோஸ் டெய்லருக்கு முன்னால் முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரால் எதுவும் செய்ய முடியவில்லை.


ரோஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற செய்தார். அதாவது தற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பேட்டிங்கை தொடங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்கம் மெதுவாக இருந்தது. முதல் 10 ஓவர்களில் 54 ரன்கள் எடுத்தார். ஆனால் ராஸ் டெய்லர் (109), அணியின் கேப்டன் (69), டாம் லாதம் (69) மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் (78) ஆகியோரின் ஆதிரடி ஆட்டத்தால் 48.1 ஓவரில் ஆறு விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இந்த வெற்றி மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. இதனால் இந்திய அணி இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அப்படி இல்லாதப்பட்சத்தில் தொடரை இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.