3-வது ஒருநாள்; தொடரும் இந்தியாவின் பந்துவீச்சு மாயாஜாலம்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது!
10:44 28-01-2019
அடுத்தடுத்து இரண்டு விக்கெட்... ஹார்த்திக் பாண்டையா அபார பந்துவீச்சு...
ஹென்றி நிக்கோலஸ் 6(8), மிட்செல் சாட்னர் 3(9) ரன்களில் வெளியேறினர்.
தற்போது - 42 ஓவர்கள் | 201 ரன்கள் | 6 விக்கெட்
களத்தில் - ரோஸ் டைலர் 81(97) | ப்ரேஸ்வெல் 3(3)
10:17 28-01-2019
4-வது விக்கெட்டை இழந்தது நியூசிலாந்து அணி... ஆட்டத்தின் 37.3-வது பந்தில் டாம் லாத்தன் 51(64) ரன்களில் வெளியேறினார்..
தற்போது - 178 ரன்கள் | 4 விக்கெட் | 37.3 ஓவர்
களத்தில் - ரோஸ் டைலர் 71(90) | ஹென்றி நிக்கோலஸ் 0(0)
09:46 AM 28-01-2019
ரோஸ் டைலர் மற்றும் டாம் லாத்தம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்...
தற்போது - 30 ஓவர்கள் | 3 விக்கெட் | 127 ரன்கள்
களத்தில் - ரோஸ் டைலர் 41(67) | டாம் லாத்தம் 31(42)
07:50 AM 28-01-2019
ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் வெளியாறினார் கோலின் முன்றோ 7(9)!
தற்போது - 5 ஓவர்கள் | 22 ரன்கள் | 1 விக்கெட்
களத்தில் - மார்டின் குப்டில் 13(14) | கேன் விள்ளியம்சன் 2(7)
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் மற்றும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா, வரலாற்று வெற்றியை பதிவு செய்து பின்னர் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மவுண்ட் மவுன்கனேய் பே ஓவல் மைதானத்தில் நடைப்பெறும் இன்றைய மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வுசெய்து விளையாடி வருகிறது.
5 ஒருநாள் கொண்ட தொடரின் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்றைய போட்டியினையும் வெற்றி பெறும் பட்சத்தில் தொடரையும் கைப்பற்றும். அதே வேலையில் இரண்டு போட்டிகளை இழந்துள்ள நியூசிலாந்து அணி இப்போட்டியையும் சேர்த்து தொடர்ந்து மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை வெல்ல முடியும். எனவே நியூசிலாந்து அணி அனைத்து யுக்திகளையும் பயன்படுத்தி இந்த போட்டியில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இன்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு குறை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.