உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடுகிறது.


நடப்பு தொடரில், லார்ட்ஸ் மைதானத்தை பொறுத்தவரையில் முதலில் பேட்டிங் செய்யும் அணியே வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் முதிலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.


இன்று லண்டனின் லார்ட்ஸில் நடைபெறும் கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து அணிகள் தயாராக உள்ளது. உலகக் கோப்பையின் 2015 பதிப்பிலிருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய நியூசிலாந்து அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தங்களது முதல் உலக கோப்பையை தட்டி செல்ல காத்திருக்கிறது.


1979, 1987 மற்றும் 1992 பதிப்பு என மூன்று பதிப்புகளில் இறுதி போட்டியில் கோப்பை நழுவவிட்ட இங்கிலாந்து அணியும் இன்றைய போட்டியில் வெற்றிப் பெற்று தங்களது முதல் உலக கோப்பையை வென்றாக வேண்டும் என்ற வலுவான விருப்பத்துடன் தங்களது எதிரியை எதிர்கொள்கிறது.


குழு கட்டத்தில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியுற்றதைத் தொடர்ந்து இங்கிலாந்தின் மறுபிரவேசத்தில் ஜேசன் ராய் முக்கிய பங்கு வகித்துள்ளார். கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் தலைமையிலான பந்துவீச்சும் அவர்களின் இருப்பை உணரவைத்துள்ளது.


மறுபுறம், நியூசிலாந்து போட்டிகளில் கணிக்க முடியாதது, கேன் வில்லியம்சன் பேட்டிங் திறன். அவரது பேட்டிங் திறன் மூலம் முன்னணி ரன் அடித்த வீரராக இருந்து வருகிறார். மறுபுறம், லாக்கி பெர்குசன், மாட் ஹென்றி மற்றும் ட்ரெண்ட் போல்ட் ஆகியோரின் பந்துவீச்சு அவர்களது கோப்பை கனவை நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.