Tokyo Paralympics: இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம் பெற்றுத்தந்தார் நிஷாத் குமார்
டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்துள்ளார் நிஷாத் குமார். அவர் தாண்டிய உயரம் இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ளது.
டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்துள்ளார் நிஷாத் குமார். அவர் தாண்டிய உயரம் இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ளது.
இந்திய வெள்ளி வீரர் நிஷாத் குமாருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.
வீரர் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கத்தை வென்றதோடு, ஆசிய அளவில் ஏற்கனவே அவர் படைத்த சாதனையையும் சமன் செய்துள்ளார்.
அமெரிக்காவின் ரோடெரிக் டவுன்சென்ட் தங்கம் வென்றார், டல்லாஸ் வைஸ் இரண்டாவது இடத்தை நிஷாத்துடன் பகிர்ந்து கொண்டார். டவுன்செண்ட் 2.15 மீ உயரம் தாண்டினார். இந்தியாவின் நிஷாத் குமார் மற்றும் டல்லாஸ் வைஸ் 2.06 மீ உயரம் தாண்டினார்கள்.
இந்திய வீரர் நிஷாத் குமாருக்கு அரசியல் தலைவர் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ராம்பால் சாஹர் 1.94 மீ உயரம் தாண்டி ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
முன்னதாக பாராலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் பவினா பென் படேல் வெள்ளி பதக்கம் வென்றார். இதனால், டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியாவுக்கு இதுவரை இரு வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.
READ ALSO | Paralympic Games: வெள்ளிப் பதக்கம் வென்ற பவினாபென் படேலுக்கு இந்தியா வாழ்த்து
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR